• Jan 23 2025

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்!

Chithra / Jan 20th 2025, 1:37 pm
image

 

களுத்துறை - மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற குழு ஒன்று ஓடைக் கரையிலுள்ள மூங்கில் புதருக்கு அருகில் மீன்பிடி வலையை வீசிய போது வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மேலும் பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், ஹொரணை நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு,

மனித எலும்புகளை ஹொரண சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்  களுத்துறை - மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற குழு ஒன்று ஓடைக் கரையிலுள்ள மூங்கில் புதருக்கு அருகில் மீன்பிடி வலையை வீசிய போது வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மேலும் பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பின்னர், ஹொரணை நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு,மனித எலும்புகளை ஹொரண சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement