• Jan 20 2025

சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கத் தயார் - நீதிமன்றுக்கு அறிவித்த மனுஷ

Chithra / Jan 20th 2025, 1:44 pm
image

 

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று  அறிவித்துள்ளார்.

மனுஷ நாணயக்காரவின் பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ், 

தம்மை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுவிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு, தனது கட்சிக்காரரை அழைத்து வாக்குமூலம் பெறுமாறும், 

அதன் பின்னர் இந்த மனுவின் உண்மைகளை வேறொரு நாளில் உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 22ம் திகதி அழைத்து உண்மைகளை சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டது.

சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கத் தயார் - நீதிமன்றுக்கு அறிவித்த மனுஷ  தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று  அறிவித்துள்ளார்.மனுஷ நாணயக்காரவின் பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ், தம்மை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுவிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு, தனது கட்சிக்காரரை அழைத்து வாக்குமூலம் பெறுமாறும், அதன் பின்னர் இந்த மனுவின் உண்மைகளை வேறொரு நாளில் உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அதன்படி, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 22ம் திகதி அழைத்து உண்மைகளை சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement