• Mar 29 2025

கொழும்பின் முக்கிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள்! பொலிஸார் தீவிர விசாரணை

Chithra / Sep 27th 2024, 12:36 pm
image


கொழும்பு - நவகமுவ, ரணால பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ரணால, நவகமுவ என்ற முகவரிக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இந்த மனித எலும்புகளை கண்டெடுத்துள்ளனர்.

இதன்படி, கடுவெல நீதவான் மற்றும் குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், 

கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளின் கையிருப்பு அரசாங்கத்தின் இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பின் முக்கிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள் பொலிஸார் தீவிர விசாரணை கொழும்பு - நவகமுவ, ரணால பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் குழுவொன்று நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ரணால, நவகமுவ என்ற முகவரிக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இந்த மனித எலும்புகளை கண்டெடுத்துள்ளனர்.இதன்படி, கடுவெல நீதவான் மற்றும் குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளின் கையிருப்பு அரசாங்கத்தின் இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement