• Sep 20 2024

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மனித உரிமை ஆணைக்குழு - பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு

Tharun / Jul 19th 2024, 5:54 pm
image

Advertisement

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான  குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(19) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான  குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை கடந்த 05ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர். பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அக்கள விஜயத்தில் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் சார் பிரச்சனைகள் தொடர்பில் கடந்த  08 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள்  பணிப்பளார், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று எமது காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு எம்மால் அனுப்பிவைக்கப்பட்டது.

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை   இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு  தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு   எதிர்வரும் 30 ஆம்  திகதி பிற்பகல் 1.30 மணிக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர், .சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை  மருத்துவ அத்தியட்சகர் ஆகியோரும் கலந்துரையாடலுக்கு வருகை தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மனித உரிமை ஆணைக்குழு - பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான  குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(19) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான  குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை கடந்த 05ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர். பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அக்கள விஜயத்தில் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் சார் பிரச்சனைகள் தொடர்பில் கடந்த  08 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள்  பணிப்பளார், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று எமது காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு எம்மால் அனுப்பிவைக்கப்பட்டது.அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை   இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு  தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு   எதிர்வரும் 30 ஆம்  திகதி பிற்பகல் 1.30 மணிக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர், .சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை  மருத்துவ அத்தியட்சகர் ஆகியோரும் கலந்துரையாடலுக்கு வருகை தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement