• May 02 2024

இஸ்ரேல் போர் குற்றம் புரிந்துள்ளது - மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு..!!

Tamil nila / Mar 8th 2024, 8:12 pm
image

Advertisement

இஸ்ரேலினால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் நிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியிருப்பானது ஆபத்தானது என ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் வெல்கர் ருர்க் இன்றைய தினம் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை பலஸ்தீனத்திற்கு பாதிப்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் குடியேற்றத் திட்டமானது அதன் சனத்தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு போர்க்குற்றம் எனவும் அவர் சாடியுள்ளார்.

இதேவேளை இஸ்ரேலின் அத்துமீறிய குடியேற்றமானது சர்வதேச சட்டத்தை மீறியுள்ள செயல் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் போர் குற்றம் புரிந்துள்ளது - மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு. இஸ்ரேலினால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் நிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியிருப்பானது ஆபத்தானது என ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் வெல்கர் ருர்க் இன்றைய தினம் கவலை வெளியிட்டுள்ளார்.இந்த நடவடிக்கை பலஸ்தீனத்திற்கு பாதிப்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இஸ்ரேலின் குடியேற்றத் திட்டமானது அதன் சனத்தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு போர்க்குற்றம் எனவும் அவர் சாடியுள்ளார்.இதேவேளை இஸ்ரேலின் அத்துமீறிய குடியேற்றமானது சர்வதேச சட்டத்தை மீறியுள்ள செயல் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement