சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை - கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேரமடுவ கிராமத்தில் சிவில் அமைப்புக்களினால் இன்று (11) திங்கட்கிழமை காலை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது குறித்த பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் பல உயிரிழப்புகள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் தமது உயிர் வாழ்க்கைக்கான உரிமை பறிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் தமது உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் யானை வேலிகளை அமைத்து தமது உயிர்களை பாதுகாக்குமாறும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த நிகழ்வில் கந்தளாய் சிவில் செயற்பாட்டாளர்கள், கிராம மக்கள் விகாராதிபதி உட்பட AHRC நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
திருமலையில் மனித உரிமைகள் தின வார நிகழ்வு முன்னெடுப்பு.samugammedia சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை - கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேரமடுவ கிராமத்தில் சிவில் அமைப்புக்களினால் இன்று (11) திங்கட்கிழமை காலை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது குறித்த பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் பல உயிரிழப்புகள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் தமது உயிர் வாழ்க்கைக்கான உரிமை பறிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். அத்துடன் தமது உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் யானை வேலிகளை அமைத்து தமது உயிர்களை பாதுகாக்குமாறும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.குறித்த நிகழ்வில் கந்தளாய் சிவில் செயற்பாட்டாளர்கள், கிராம மக்கள் விகாராதிபதி உட்பட AHRC நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.