• Nov 28 2024

இலங்கை இராணுவ வீரர்களைக் கூலிப்படைகளில் அமர்த்தும் மனித கடத்தல் செயற்பாடு! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / May 8th 2024, 12:34 pm
image

 

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஆயுதப்படை உறுப்பினர்கள் சிக்கக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

30 ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்து வந்த கொடூரமான போரை தோற்கடிக்க தங்கள் உயிரை தியாகம் செய்த ஏராளமான ஆயுதப்படை வீரர்கள், ஒரு குழுவின் மனித கடத்தலின் விளைவாக சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போர் முனைக்கு சென்றனர்.

இந்த போர் முனைகளில் பணிபுரியும் போது கணிசமான எண்ணிக்கையான எமது போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

மேலுமொரு பகுதியினர் காயமடைந்துள்ளதாகவும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் முப்படைகளிலும் கௌரவமாக சேவையாற்றி ஓய்வு பெற்ற இவ்வாறான போர்வீரர்கள் வெளிநாட்டில் கூலிப்படையாக செயற்படுவது வருத்தமளிக்கிறது.

இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்த கடத்தல்காரர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.


இலங்கை இராணுவ வீரர்களைக் கூலிப்படைகளில் அமர்த்தும் மனித கடத்தல் செயற்பாடு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஆயுதப்படை உறுப்பினர்கள் சிக்கக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.30 ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்து வந்த கொடூரமான போரை தோற்கடிக்க தங்கள் உயிரை தியாகம் செய்த ஏராளமான ஆயுதப்படை வீரர்கள், ஒரு குழுவின் மனித கடத்தலின் விளைவாக சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போர் முனைக்கு சென்றனர்.இந்த போர் முனைகளில் பணிபுரியும் போது கணிசமான எண்ணிக்கையான எமது போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலுமொரு பகுதியினர் காயமடைந்துள்ளதாகவும் உண்மைகள் வெளியாகியுள்ளன.இலங்கையின் முப்படைகளிலும் கௌரவமாக சேவையாற்றி ஓய்வு பெற்ற இவ்வாறான போர்வீரர்கள் வெளிநாட்டில் கூலிப்படையாக செயற்படுவது வருத்தமளிக்கிறது.இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்த கடத்தல்காரர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement