தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை, கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை மாத்தறை - தெய்யந்தர - அத்தபத்துகந்த சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் தெய்யந்தர, பரபாமுல்ல பகுதியில் வசித்து வந்த, 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 11ஆம் திகதி தனது பிள்ளையை பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்த்துள்ளதாகவும், இன்று (13) காலை தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, வீதியில் பதுங்கியிருந்த கணவன், தடியால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட மனைவிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர் சில காலமாக தனது தாய் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், மேற்படி சம்பவத்திற்கு குடும்பத் தகராறே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.
கொலை செய்த சந்தேக நபர் ஹந்துகல பிரதேசத்தில் வசிக்கும் மீன் வியாபாரி என்பதுடன் சந்தேக நபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் தெய்யந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை, கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் இன்று காலை மாத்தறை - தெய்யந்தர - அத்தபத்துகந்த சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் தெய்யந்தர, பரபாமுல்ல பகுதியில் வசித்து வந்த, 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் கடந்த 11ஆம் திகதி தனது பிள்ளையை பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்த்துள்ளதாகவும், இன்று (13) காலை தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, வீதியில் பதுங்கியிருந்த கணவன், தடியால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கொலை செய்யப்பட்ட மனைவிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவர் சில காலமாக தனது தாய் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது.இந்நிலையில், மேற்படி சம்பவத்திற்கு குடும்பத் தகராறே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.கொலை செய்த சந்தேக நபர் ஹந்துகல பிரதேசத்தில் வசிக்கும் மீன் வியாபாரி என்பதுடன் சந்தேக நபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.சம்பவம் தொடர்பில் தெய்யந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.