பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளிடம் வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் வசதிகள் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, எம்.பி.க்கு ஒரு பாய், தலையணை, தட்டு மற்றும் கோப்பை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கண்டி தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறைச்சாலை அதிகாரிகள் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதன் காரணமாகவே சாமர சம்பத் எம்.பியும் தனக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனக்கும் வெளியிலிருந்து உணவு வேண்டும் - சாமர சம்பத் எம்.பி. கோரிக்கை பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளிடம் வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்துள்ளார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் வசதிகள் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அதன்படி, எம்.பி.க்கு ஒரு பாய், தலையணை, தட்டு மற்றும் கோப்பை வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், கண்டி தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர சிறைச்சாலை அதிகாரிகள் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளனர்.இதன் காரணமாகவே சாமர சம்பத் எம்.பியும் தனக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.