• Nov 22 2024

சிங்கள மக்களின் வாக்குகளுடன் மாத்திரம் தேர்தலில் வெற்றிபெற விரும்பவில்லை - அனுர தெரிவிப்பு

Chithra / Jul 28th 2024, 12:01 pm
image

 

ஐக்கிய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கு முஸ்லீம்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் முஸ்லீம் சகோதரத்துவத்தின் காலி பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் முன்னணி எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அனுரகுமார, இலங்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடனேயே தனது அரசாங்கம் ஆட்சிக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் ஆதரவை பெற்ற அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என எதிர்பாத்துள்ளது. ஐக்கிய அரசாங்கமொன்றை உருவாக்குதே தனது கட்சியின் எதிர்பார்ப்பு.

சிங்கள வாக்காளர்களின் வாக்குகளுடன் தேர்தலை வெல்வது மாத்திரம் எங்களிற்கு போதுமானதல்ல. வெற்றி பெறுவதற்கு சிங்களமக்களின் வாக்குகள் போதுமானவை ஆனால் எங்களின் நோக்கம் அதுவல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தீர்ப்புகளிற்கு எதிராக செயற்படுகின்றார். நேற்று நடந்தது மாத்திரமே அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு போதுமானது என தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் வாக்குகளுடன் மாத்திரம் தேர்தலில் வெற்றிபெற விரும்பவில்லை - அனுர தெரிவிப்பு  ஐக்கிய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கு முஸ்லீம்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணையவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் முஸ்லீம் சகோதரத்துவத்தின் காலி பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் முன்னணி எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அனுரகுமார, இலங்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடனேயே தனது அரசாங்கம் ஆட்சிக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தி தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களின் ஆதரவை பெற்ற அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என எதிர்பாத்துள்ளது. ஐக்கிய அரசாங்கமொன்றை உருவாக்குதே தனது கட்சியின் எதிர்பார்ப்பு.சிங்கள வாக்காளர்களின் வாக்குகளுடன் தேர்தலை வெல்வது மாத்திரம் எங்களிற்கு போதுமானதல்ல. வெற்றி பெறுவதற்கு சிங்களமக்களின் வாக்குகள் போதுமானவை ஆனால் எங்களின் நோக்கம் அதுவல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தீர்ப்புகளிற்கு எதிராக செயற்படுகின்றார். நேற்று நடந்தது மாத்திரமே அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்வதற்கு போதுமானது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement