• Nov 25 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு நானே தகுதியானவன்; 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் மூடர்கள்! - ஜனக ரத்நாயக்க அதிரடிக் கருத்து

Chithra / Mar 12th 2024, 9:53 am
image

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை எனக்கு உள்ளது. என்னை விட தகைமையானவர் போட்டியிடுவதாக இருந்தால் நான் அவருக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என  தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2015 முதல் 2024 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை நாங்கள் இந்த மாதம் வெளியிடுவோம்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் மூடர்கள். இவர்களை மக்கள் இனி தெரிவு செய்ய கூடாது. மோசடியாளர்களை அப்புறப்படுத்தாமல் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீளும் நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது மக்களின் பசியை போக்கும் கொள்கையை நிலையாக செயற்படுத்துவோம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தலைமை எனக்கு உள்ளது. என்னை விட சிறந்த தகைமையானவர் ஒருவர் போட்டியிடுவதாக இருந்தால் அவருக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு நானே தகுதியானவன்; 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் மூடர்கள் - ஜனக ரத்நாயக்க அதிரடிக் கருத்து  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை எனக்கு உள்ளது. என்னை விட தகைமையானவர் போட்டியிடுவதாக இருந்தால் நான் அவருக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என  தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.2015 முதல் 2024 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும்.அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை நாங்கள் இந்த மாதம் வெளியிடுவோம்.225 பாராளுமன்ற உறுப்பினர்களும் மூடர்கள். இவர்களை மக்கள் இனி தெரிவு செய்ய கூடாது. மோசடியாளர்களை அப்புறப்படுத்தாமல் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீளும் நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது மக்களின் பசியை போக்கும் கொள்கையை நிலையாக செயற்படுத்துவோம்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தலைமை எனக்கு உள்ளது. என்னை விட சிறந்த தகைமையானவர் ஒருவர் போட்டியிடுவதாக இருந்தால் அவருக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement