• Nov 22 2024

கோட்டாவின் நூலில் பல பொய்கள்; பஷிலுடன் வெடித்த முரண்பாடு..! - கம்மன்பில பகிரங்கம்

Chithra / Mar 12th 2024, 9:28 am
image

 


கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நூலில் ஒருசில உண்மைகள் காணப்படுவதைப் போன்று பல பொய்களும் காணப்படுகின்றன என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில்  நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 'ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி' எனும்  தலைப்பில் வெளியிட்டுள்ள நூலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தகத்தில் 66 ஆவது பக்கத்தில் 'உதய  மற்றும் விமல் ஆகியோர் எம்மை விட்டு விலகிச் சென்றார்கள்'என குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதூரத்தன்மையை அவர் மறந்து விட்டார்.

உண்மையில் நாங்கள் விலகிச் செல்லவில்லை. விலக்கப்பட்டோம். 

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவர் மறந்து விட்டார்.

அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காக எங்களை அரசாங்கத்திலிருந்து விலக்கவில்லை. பொருளாதார பாதிப்பால் சமூக கட்டமைப்பில் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்து அரசாங்கத்திடம் எடுத்துரைத்தோம்.

எமது கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாததால் மக்களிடம் உண்மையை எடுத்துரைத்தோம். இதன் பின்னரே நாங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டோம்.

65 ஆவது பக்கத்தில் 'பசிலுக்கும் உதயகம்மன்பிலவுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு காணப்பட்டது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

பஷிலுக்கும் எனக்கும் தனிப்பட்ட முரண்பாடு தோற்றம் பெற நான் அவரின் மகளை திருமணம் முடித்துக் கொள்ள கேட்கவுமில்லை, மல்வானை சொகுசு வீட்டுக்கு உரிமை கோரவுமில்லை.

எனக்கு அவரிடம் அரசியல் முரண்பாடு இருந்ததே தவிர தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் இருக்கவில்லை.

ஆகவே பஷிலுக்கும் எனக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பகையை கோட்டபய ராஜபக்ஷ வெளிப்படுத்த வேண்டும். என்றார்.

கோட்டாவின் நூலில் பல பொய்கள்; பஷிலுடன் வெடித்த முரண்பாடு. - கம்மன்பில பகிரங்கம்  கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நூலில் ஒருசில உண்மைகள் காணப்படுவதைப் போன்று பல பொய்களும் காணப்படுகின்றன என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில்  நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 'ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி' எனும்  தலைப்பில் வெளியிட்டுள்ள நூலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.புத்தகத்தில் 66 ஆவது பக்கத்தில் 'உதய  மற்றும் விமல் ஆகியோர் எம்மை விட்டு விலகிச் சென்றார்கள்'என குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதூரத்தன்மையை அவர் மறந்து விட்டார்.உண்மையில் நாங்கள் விலகிச் செல்லவில்லை. விலக்கப்பட்டோம். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை அவர் மறந்து விட்டார்.அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காக எங்களை அரசாங்கத்திலிருந்து விலக்கவில்லை. பொருளாதார பாதிப்பால் சமூக கட்டமைப்பில் ஏற்படப் போகும் விளைவுகள் குறித்து அரசாங்கத்திடம் எடுத்துரைத்தோம்.எமது கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாததால் மக்களிடம் உண்மையை எடுத்துரைத்தோம். இதன் பின்னரே நாங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டோம்.65 ஆவது பக்கத்தில் 'பசிலுக்கும் உதயகம்மன்பிலவுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு காணப்பட்டது' என குறிப்பிடப்பட்டுள்ளது.பஷிலுக்கும் எனக்கும் தனிப்பட்ட முரண்பாடு தோற்றம் பெற நான் அவரின் மகளை திருமணம் முடித்துக் கொள்ள கேட்கவுமில்லை, மல்வானை சொகுசு வீட்டுக்கு உரிமை கோரவுமில்லை.எனக்கு அவரிடம் அரசியல் முரண்பாடு இருந்ததே தவிர தனிப்பட்ட முரண்பாடுகள் ஏதும் இருக்கவில்லை.ஆகவே பஷிலுக்கும் எனக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பகையை கோட்டபய ராஜபக்ஷ வெளிப்படுத்த வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement