• Apr 16 2025

சுமந்திரனின் சதி முயற்சியால் தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன் - ஜீவராசா பகிரங்கம்

Chithra / Apr 14th 2025, 3:47 pm
image


தமிழரசு கட்சியின் தற்போதைய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சுமந்திரனின் சதி முயற்சியால்  தான் தமிழரசு கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டதாக கரைச்சு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசாவின் தெரிவித்தார். 

ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கையில், 

இதன் காரணமாகவே தற்பொழுது சுயேட்சையாக பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் தமது வேட்ப்பமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல, பாரியளவில் பணத்தை செலவு செய்வதற்கு தன்னிடம் வசதி இல்லை.

லட்சம் ரூபாய் பணத்தை செலவுசெய்யது வழக்கு தாக்கல் செய்த அனைவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில அரசியல்வாதிகளின் சதி திட்டத்தால் இத்தேர்தலில் தாம் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் பார்வைக்குச் செல்லும் வரையில் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் ஓயப் போவதில்லை என கரைச்சு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்சண்முகம் ஜீவராசா தெரிவித்துள்ளார்.


சுமந்திரனின் சதி முயற்சியால் தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன் - ஜீவராசா பகிரங்கம் தமிழரசு கட்சியின் தற்போதைய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சுமந்திரனின் சதி முயற்சியால்  தான் தமிழரசு கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டதாக கரைச்சு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசாவின் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கையில், இதன் காரணமாகவே தற்பொழுது சுயேட்சையாக பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும் தமது வேட்ப்பமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக நீதிமன்றம் செல்ல, பாரியளவில் பணத்தை செலவு செய்வதற்கு தன்னிடம் வசதி இல்லை.லட்சம் ரூபாய் பணத்தை செலவுசெய்யது வழக்கு தாக்கல் செய்த அனைவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சில அரசியல்வாதிகளின் சதி திட்டத்தால் இத்தேர்தலில் தாம் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் பார்வைக்குச் செல்லும் வரையில் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் ஓயப் போவதில்லை என கரைச்சு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்சண்முகம் ஜீவராசா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement