அமெரிக்க அதிபா் தோ்தலில் தான் போட்டியிடுவது உறுதி என அந்த நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தோ்தலில் அவரை எதிா்த்துப் போட்டியிடவிருக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான முதல் நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியதால் போட்டியிலிருந்து விலக வேண்டுமென்று அவருக்கு நெருக்கடி அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடப்போவது நான்தான். அந்தப் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை; நானும் விலகப் போவதில்லை.
இந்தத் தோ்தலில் நான் இறுதிவரை நின்று களம் காண்பேன். நாம் அனைவரும் இணைந்து வெற்றியும் பெறுவோம்.
நீங்கள் (ஆதரவாளா்கள்) செய்யவேண்டியதெல்லாம் டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடிப்பதற்காக எனக்கும் துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கும் சிறிய தொகையை நன்கொடையாக அளித்து உதவுவது மட்டும்தான் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், டிரம்புடன் முதல்முறையாக கடந்த வாரம் நடைபெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறினாா். பேச வாா்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமலும் அா்த்தமில்லாமலும் பேசியது போன்ற ஜோ பைடனின் செயல்கள் அவா் மீதான அதிருப்தியை ஜனநாயகக் கட்சியினரின் ஒரு பிரிவினரிடையே ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதைத் தொடா்ந்து போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினரிடையே அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது. அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸை தோ்தலில் போட்டியிடச் செய்யவேண்டும் கோரிக்கைகழும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சா்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிக்கையை ஜோ பைடன் வெளியிட்டுள்ளாா்.
தேர்தலில் போட்டியிடுவேன் - திட்டவட்டமாக தெரிவித்த ஜோ பைடன். அமெரிக்க அதிபா் தோ்தலில் தான் போட்டியிடுவது உறுதி என அந்த நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தோ்தலில் அவரை எதிா்த்துப் போட்டியிடவிருக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான முதல் நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியதால் போட்டியிலிருந்து விலக வேண்டுமென்று அவருக்கு நெருக்கடி அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடப்போவது நான்தான். அந்தப் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை; நானும் விலகப் போவதில்லை.இந்தத் தோ்தலில் நான் இறுதிவரை நின்று களம் காண்பேன். நாம் அனைவரும் இணைந்து வெற்றியும் பெறுவோம்.நீங்கள் (ஆதரவாளா்கள்) செய்யவேண்டியதெல்லாம் டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடிப்பதற்காக எனக்கும் துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கும் சிறிய தொகையை நன்கொடையாக அளித்து உதவுவது மட்டும்தான் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், டிரம்புடன் முதல்முறையாக கடந்த வாரம் நடைபெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறினாா். பேச வாா்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமலும் அா்த்தமில்லாமலும் பேசியது போன்ற ஜோ பைடனின் செயல்கள் அவா் மீதான அதிருப்தியை ஜனநாயகக் கட்சியினரின் ஒரு பிரிவினரிடையே ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.அதைத் தொடா்ந்து போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினரிடையே அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது. அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸை தோ்தலில் போட்டியிடச் செய்யவேண்டும் கோரிக்கைகழும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், சா்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிக்கையை ஜோ பைடன் வெளியிட்டுள்ளாா்.