ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையை சேர்ந்த ஒருவர் தான் வரப்போகிறார். அவரோடு இணைந்து பேரம் பேசி எங்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தான் சரியானது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்
யாழில் இன்றைய தினம்(26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையை சேர்ந்த ஒருவர் தான் வரப்போகிறார். அவரோடு இணைந்து பேரம் பேசி எங்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தான் சரியானது. பிரபாகரனும் ஒரு முறை பேரம் பேசி இருக்கிறார். மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் அவர் எடுத்த நிலைப்பாடு அத்தேர்தலை பகிஷ்கரித்தல் என்பதே. இதற்காக பல கோடிகள் கைமாறப்பட்டது. இதன் மூலம் பிரபாகரன் தமிழ் மக்களுக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னார். ஏனென்றால் தமிழ் மக்களின் வாக்குகளால் ரணில் வெற்றி பெற்றால் பேச்சுவார்த்தை என்று சொல்லி ஏமாற்றுவார். ஆனால் மஹிந்த சண்டித்தனம் காட்டுவர். அப்படி செய்தால் அவரை அடக்கி விடலாம் என்று தான் அவர் தப்புக்கணக்கு போட்டார். எனவே இச்சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு உங்கள் ஆதரவா? அல்லது தேசிய கட்சிக்கு உங்கள் ஆதரவா? என ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு கூறினார்
பிரபாகரனால் தமிழரசுக்கட்சி நிறுவப்பட்டது. அவருடைய அரசியல் தேவைக்காக உருளைக்கிழங்குகளை சாக்கில் போட்டு ஒரு மூட்டைக்குள் கட்டி விட்டு போனார். இப்போது கட்டு கழன்று எல்லாம் சிதறி விட்டன. இவ்வாறான நிலையில் தமிழ் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பது சாத்தியமானதா? அல்லது தென்னிலங்கை பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பது சாத்தியமானதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னுடைய அரசியல் வாழ்க்கை யாதெனில் என்னிடமுள்ள பிழையை நீங்கள் சுட்டிக்காட்டினாலோ அல்லது அதை நான் அறிந்தாலோ அதனை திருத்திக்கொள்வேன். நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று சொல்ல மாட்டேன். என்று அவர் மேலும் கூறினார்.
நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று சொல்ல மாட்டேன் - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்.samugammedia ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையை சேர்ந்த ஒருவர் தான் வரப்போகிறார். அவரோடு இணைந்து பேரம் பேசி எங்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தான் சரியானது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்யாழில் இன்றைய தினம்(26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையை சேர்ந்த ஒருவர் தான் வரப்போகிறார். அவரோடு இணைந்து பேரம் பேசி எங்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தான் சரியானது. பிரபாகரனும் ஒரு முறை பேரம் பேசி இருக்கிறார். மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் அவர் எடுத்த நிலைப்பாடு அத்தேர்தலை பகிஷ்கரித்தல் என்பதே. இதற்காக பல கோடிகள் கைமாறப்பட்டது. இதன் மூலம் பிரபாகரன் தமிழ் மக்களுக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னார். ஏனென்றால் தமிழ் மக்களின் வாக்குகளால் ரணில் வெற்றி பெற்றால் பேச்சுவார்த்தை என்று சொல்லி ஏமாற்றுவார். ஆனால் மஹிந்த சண்டித்தனம் காட்டுவர். அப்படி செய்தால் அவரை அடக்கி விடலாம் என்று தான் அவர் தப்புக்கணக்கு போட்டார். எனவே இச்சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு உங்கள் ஆதரவா அல்லது தேசிய கட்சிக்கு உங்கள் ஆதரவா என ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு கூறினார் பிரபாகரனால் தமிழரசுக்கட்சி நிறுவப்பட்டது. அவருடைய அரசியல் தேவைக்காக உருளைக்கிழங்குகளை சாக்கில் போட்டு ஒரு மூட்டைக்குள் கட்டி விட்டு போனார். இப்போது கட்டு கழன்று எல்லாம் சிதறி விட்டன. இவ்வாறான நிலையில் தமிழ் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பது சாத்தியமானதா அல்லது தென்னிலங்கை பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பது சாத்தியமானதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். என்னுடைய அரசியல் வாழ்க்கை யாதெனில் என்னிடமுள்ள பிழையை நீங்கள் சுட்டிக்காட்டினாலோ அல்லது அதை நான் அறிந்தாலோ அதனை திருத்திக்கொள்வேன். நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று சொல்ல மாட்டேன். என்று அவர் மேலும் கூறினார்.