• Sep 12 2025

ஐஸ் போதைப்பொருள் இரசாயனங்கள் “பாணந்துறை நிலங்க”வுக்கு சொந்தமானது; கெஹெல்பத்தர பத்மே CID இல் வாக்குமூலம்!

CID
shanuja / Sep 11th 2025, 6:31 pm
image

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் “பாணந்துறை நிலங்க”வுக்கு சொந்தமானது என்று கெஹெல்பத்தர பத்மே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.


இதனையடுத்து “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலகக் கும்பல் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து அவர்கள் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.


பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் செப்டெம்பர் 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.


இது தொடர்பில் “கெஹெல்பத்தர பத்மே” விடம் நடத்தப்பட்ட விசாரணையில், மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் “பாணந்துறை நிலங்க”வுக்கு சொந்தமானது என வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஸ் போதைப்பொருள் இரசாயனங்கள் “பாணந்துறை நிலங்க”வுக்கு சொந்தமானது; கெஹெல்பத்தர பத்மே CID இல் வாக்குமூலம் மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் “பாணந்துறை நிலங்க”வுக்கு சொந்தமானது என்று கெஹெல்பத்தர பத்மே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.இதனையடுத்து “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலகக் கும்பல் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து அவர்கள் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் செப்டெம்பர் 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பில் “கெஹெல்பத்தர பத்மே” விடம் நடத்தப்பட்ட விசாரணையில், மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் “பாணந்துறை நிலங்க”வுக்கு சொந்தமானது என வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement