• Nov 24 2024

நான் ஜனாதிபதியானால் எரிபொருள் 200 ரூபாவால் குறைக்கப்படும்..! ஜனக ரத்நாயக்க சூளுரை

Chithra / Aug 27th 2024, 8:14 am
image

 

தாம் ஜனாதிபதியான பின்னர் மக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கும் அதன் கீழ் மதுபானத்தின் விலையை இருபத்தைந்து சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

மதுபானங்களின் விலையேற்றம் காரணமாக சட்டவிரோத மது பாவனை அதிகரித்து மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போதே இதனைக் குறிப்பிட்ட ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,

நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை மக்களிடம் முன்வைத்தவன் நான். அதன்படி இருபது பொருட்களின் விலையை நிலைப்படுத்தி பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.

குறிப்பாக உலர் பழங்களை வாங்கும் போது, ​​ஒரு கிலோ உலர் பழம் எண்ணூறு ரூபாய் இலாபமாக தொழிலதிபர்களுக்கு கிடைக்கிறது. எரிபொருட்களின் விலை உயர்வினால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை இருநூறு ரூபாவால் குறைக்கலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட்டுறவு சங்கத்தில் கூறினேன்.

ஆனால் கடந்த ஆறு ஏழு மாதங்களுக்குள் எரிபொருளின் விலை பத்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மரக்கறி விலைகள் அதிகரிக்கிறது.

எனது அரசாங்கத்தின் கீழ் ரயிலில் சரக்குகள் கொண்டு செல்லப்படும். 

எனது ஆட்சியில் மதுவின் விலை குறைக்கப்படும், ஆனால் மது அருந்த வேண்டும் என்று அதற்கு அர்த்தமில்லை. மது அருந்துபவர்களுக்கு நியாயமான விலையில் மது வழங்குவதுதான். என தெரிவித்தார்.

நான் ஜனாதிபதியானால் எரிபொருள் 200 ரூபாவால் குறைக்கப்படும். ஜனக ரத்நாயக்க சூளுரை  தாம் ஜனாதிபதியான பின்னர் மக்களுக்கு குறைந்த விலையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கும் அதன் கீழ் மதுபானத்தின் விலையை இருபத்தைந்து சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.மதுபானங்களின் விலையேற்றம் காரணமாக சட்டவிரோத மது பாவனை அதிகரித்து மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.ஹோமாகமவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போதே இதனைக் குறிப்பிட்ட ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை மக்களிடம் முன்வைத்தவன் நான். அதன்படி இருபது பொருட்களின் விலையை நிலைப்படுத்தி பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.குறிப்பாக உலர் பழங்களை வாங்கும் போது, ​​ஒரு கிலோ உலர் பழம் எண்ணூறு ரூபாய் இலாபமாக தொழிலதிபர்களுக்கு கிடைக்கிறது. எரிபொருட்களின் விலை உயர்வினால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை இருநூறு ரூபாவால் குறைக்கலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட்டுறவு சங்கத்தில் கூறினேன்.ஆனால் கடந்த ஆறு ஏழு மாதங்களுக்குள் எரிபொருளின் விலை பத்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மரக்கறி விலைகள் அதிகரிக்கிறது.எனது அரசாங்கத்தின் கீழ் ரயிலில் சரக்குகள் கொண்டு செல்லப்படும். எனது ஆட்சியில் மதுவின் விலை குறைக்கப்படும், ஆனால் மது அருந்த வேண்டும் என்று அதற்கு அர்த்தமில்லை. மது அருந்துபவர்களுக்கு நியாயமான விலையில் மது வழங்குவதுதான். என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement