பிரச்சினைகள் ஏற்பட்டால் அரசியலை பார்க்காமல் தீர்வு வழங்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கனடாவில் உறுதிமொழி வழங்கினார்.
கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றார்.
அந்தவகையில், நேற்று முன்தினம்(23) இடம்பெற்ற சந்திப்பில்,
நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரே கஞ்சாவை கொண்டு திரிவதாகவும் இதற்கு என் தீர்வு என அங்கிருந்த ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் பிறக்கும் போது யாரும் பிழையானவர்களாக பிறப்பதில்லை. ஆனால் அதற்கான system மாற்றம் ஏற்படுமாயின் இந்த பிரச்சினை இல்லை.
எனவே ஒவ்வொரு வளர்ச்சியிலும் மாற்றம் வேண்டும்.
பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் நடந்து கொள்ளும் விதம் அரசாங்கத்தின் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே காணப்படுகின்றது.
அதாவது அரசாங்கம் சரியான முறையில் செல்லுமாயின் சரியான முறையில் அனைத்தும் நடக்கும்.
நான் உறுதி மொழி வழங்குகிறேன் நாங்கள் ஒரு பிழை ஏற்படுமாயின் அதற்கு அரசியலை சேர்க்காமல் தீர்வு வழங்க முடியும் எனவும் அனுர பதிலளித்தார்.
பிரச்சினைகள் ஏற்பட்டால் அரசியலை பார்க்காமல் தீர்வு. கனடாவில் அனுர வாக்குறுதி. பிரச்சினைகள் ஏற்பட்டால் அரசியலை பார்க்காமல் தீர்வு வழங்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கனடாவில் உறுதிமொழி வழங்கினார்.கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றார்.அந்தவகையில், நேற்று முன்தினம்(23) இடம்பெற்ற சந்திப்பில், நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரே கஞ்சாவை கொண்டு திரிவதாகவும் இதற்கு என் தீர்வு என அங்கிருந்த ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.நாட்டில் பிறக்கும் போது யாரும் பிழையானவர்களாக பிறப்பதில்லை. ஆனால் அதற்கான system மாற்றம் ஏற்படுமாயின் இந்த பிரச்சினை இல்லை. எனவே ஒவ்வொரு வளர்ச்சியிலும் மாற்றம் வேண்டும்.பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் நடந்து கொள்ளும் விதம் அரசாங்கத்தின் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே காணப்படுகின்றது.அதாவது அரசாங்கம் சரியான முறையில் செல்லுமாயின் சரியான முறையில் அனைத்தும் நடக்கும்.நான் உறுதி மொழி வழங்குகிறேன் நாங்கள் ஒரு பிழை ஏற்படுமாயின் அதற்கு அரசியலை சேர்க்காமல் தீர்வு வழங்க முடியும் எனவும் அனுர பதிலளித்தார்.