• Jul 01 2025

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நிதிப்பிரிவு திறப்பு விழா!

shanuja / Jul 1st 2025, 3:36 pm
image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான தனியான நிதிப்பிரிவு இன்று (1) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி Y.திவாகர் தலைமையில்  ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. 


 நிகழ்வின் பிரதம விருந்தினராக  வடக்கு மாகாண பிரதம செயலாளர்  தனுஜா முருகேசன், கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 


அதனைத் தொடர்ந்து நிதிப்பிரிவு அலுவலகம் சம்பிரதாய பூர்வமாக  பிரதம விருந்தினரால் திறந்து வைக்கப்பட்டது.


நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம நிதிப்பிரிவு பிரதி செயலாளர் திரு.எஸ் குகதாஸ், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி P.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் V.P.S.D பத்திரண யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை நிர்வாக உத்தியோகத்தர் S.சிறிபாஸ்கரன்,  வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நிதிப்பிரிவு திறப்பு விழா யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான தனியான நிதிப்பிரிவு இன்று (1) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி Y.திவாகர் தலைமையில்  ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.  நிகழ்வின் பிரதம விருந்தினராக  வடக்கு மாகாண பிரதம செயலாளர்  தனுஜா முருகேசன், கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நிதிப்பிரிவு அலுவலகம் சம்பிரதாய பூர்வமாக  பிரதம விருந்தினரால் திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம நிதிப்பிரிவு பிரதி செயலாளர் திரு.எஸ் குகதாஸ், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி P.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் V.P.S.D பத்திரண யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை நிர்வாக உத்தியோகத்தர் S.சிறிபாஸ்கரன்,  வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement