• Jun 18 2026

வாகனங்களுக்கான வரிச்சலுகை நீக்கப்பட்டால் விலைகள் கடுமையாக உயரும் - இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை

Chithra / Jun 17th 2026, 8:15 am
image


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு பாரியளவில் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.


கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ, 2016 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1971/10 இலக்க வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை தற்போது நடைமுறையில் உள்ளதாக தெரிவித்தார்.


இந்த வரிச்சலுகை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், புதிய வாகனங்கள் மற்றும் பயன்படுத்திய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி முறைகளில் உள்ள வேறுபாடுகளை விளக்கினார்.


அவரது கூற்றுப்படி, புதிய வாகனங்களை இறக்குமதி செய்யும் முதன்மை முகவர் நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விலைப்பட்டியலின் அடிப்படையிலேயே சுங்கத் திணைக்களம் வரியை கணக்கிடுகிறது. ஆனால் பயன்படுத்திய வாகனங்களின் போது, உற்பத்தியாளர்களின் உத்தியோகபூர்வ விலைகளை அடிப்படையாகக் கொண்டு வரி கணக்கிடப்படுவதால், வெளிநாட்டு ஏலங்களில் குறைந்த விலையில் வாங்கப்படும் வாகனங்களுக்கும் அதிக வரிச்சுமை ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.


மேலும், பயன்படுத்திய வாகனங்களின் வயது மற்றும் தேய்மானம் ஆகியவை வரி கணக்கீட்டில் போதுமான அளவில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் வெளிநாடுகளில் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் இலங்கையில் பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது எனவும் கூறினார்.


இந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், வெகன் ஆர் ரக வாகனங்களின் விலை சுமார் 7.5 இலட்சம் ரூபாவாலும், யாரிஸ் ரக வாகனங்களின் விலை சுமார் 10 இலட்சம் ரூபாவாலும், வெசல் ரக வாகனங்களின் விலை சுமார் 20 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


புதிய வரி திருத்தம் அமல்படுத்தப்பட்டால், வெகன் ஆர் வாகனத்தின் விலை சுமார் 90 இலட்சம் ரூபாவையும், வெசல் வாகனத்தின் விலை சுமார் 2.2 கோடி ரூபாவையும் எட்டும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் நடுத்தர வர்க்க மக்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வது முற்றிலும் எட்டாக்கனியாக மாறிவிடும் என எச்சரித்தார்.


அதேவேளை, பயன்படுத்திய வாகனங்களுக்கான வரி விதிப்பு முறையை மறுபரிசீலனை செய்து, உண்மையான கொள்வனவு விலையை அடிப்படையாகக் கொண்ட நியாயமான வரி அமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


வாகனங்களுக்கான வரிச்சலுகை நீக்கப்பட்டால் விலைகள் கடுமையாக உயரும் - இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு பாரியளவில் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ, 2016 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1971/10 இலக்க வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை தற்போது நடைமுறையில் உள்ளதாக தெரிவித்தார்.இந்த வரிச்சலுகை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், புதிய வாகனங்கள் மற்றும் பயன்படுத்திய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி முறைகளில் உள்ள வேறுபாடுகளை விளக்கினார்.அவரது கூற்றுப்படி, புதிய வாகனங்களை இறக்குமதி செய்யும் முதன்மை முகவர் நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விலைப்பட்டியலின் அடிப்படையிலேயே சுங்கத் திணைக்களம் வரியை கணக்கிடுகிறது. ஆனால் பயன்படுத்திய வாகனங்களின் போது, உற்பத்தியாளர்களின் உத்தியோகபூர்வ விலைகளை அடிப்படையாகக் கொண்டு வரி கணக்கிடப்படுவதால், வெளிநாட்டு ஏலங்களில் குறைந்த விலையில் வாங்கப்படும் வாகனங்களுக்கும் அதிக வரிச்சுமை ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.மேலும், பயன்படுத்திய வாகனங்களின் வயது மற்றும் தேய்மானம் ஆகியவை வரி கணக்கீட்டில் போதுமான அளவில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் வெளிநாடுகளில் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் இலங்கையில் பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது எனவும் கூறினார்.இந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், வெகன் ஆர் ரக வாகனங்களின் விலை சுமார் 7.5 இலட்சம் ரூபாவாலும், யாரிஸ் ரக வாகனங்களின் விலை சுமார் 10 இலட்சம் ரூபாவாலும், வெசல் ரக வாகனங்களின் விலை சுமார் 20 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.புதிய வரி திருத்தம் அமல்படுத்தப்பட்டால், வெகன் ஆர் வாகனத்தின் விலை சுமார் 90 இலட்சம் ரூபாவையும், வெசல் வாகனத்தின் விலை சுமார் 2.2 கோடி ரூபாவையும் எட்டும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் நடுத்தர வர்க்க மக்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வது முற்றிலும் எட்டாக்கனியாக மாறிவிடும் என எச்சரித்தார்.அதேவேளை, பயன்படுத்திய வாகனங்களுக்கான வரி விதிப்பு முறையை மறுபரிசீலனை செய்து, உண்மையான கொள்வனவு விலையை அடிப்படையாகக் கொண்ட நியாயமான வரி அமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement