உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியம் பேசக்கூடாது என்பது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதே என்று அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன் முழு விபரமும் வருமாறு
உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களம் தமிழர் தாயகத்தில் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் வலைத்தளங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்ட வேட்பாளர்கள் தற்போது நேரடிப் பிரச்சாரத்தையும் ஆரம்பித்து விட்டனர்.
வேட்பாளர்களது தேர்தல் அலுவலகங்களும் கிராமங்களில் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்திற்கு முரணாக வேட்பாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுகின்றன. பிரதான வீதிகளில் உள்ள சுவரொட்டிகளை பொலிசார் அகற்றினாலும், உள்வீதிகளில் சுவரொட்டிகள் அப்படியே இருக்கின்றன. தேர்தல் விதிகளின்படி சுவரொட்டிப் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாது. வேட்பாளர்கள் சுவரொட்டிகளை அவரது அலுவலகத்தில் மட்டும் காட்சிக்கு வைத்திருக்கலாம்.
தாயகத்தில் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டங்கள் மட்டும் மண்டபங்களில் இடம்பெறுகின்றன. திறந்தவெளிப் பிரச்சாரக் கூட்டங்களை இன்னமும் ஆரம்பமாகவில்லை. தமிழத்தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்கட்சி போன்றவை ஆங்காங்கே அறிமுகக் கூட்டங்களை நடாத்தியுள்ளன. அனைத்து உள்ளூராட்சி சபைகள் தொடர்பாகவும் இவ் அறிமுகக் கூட்டங்கள் இடம்பெற்றதாக கூறமுடியாது.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் அலுவலகங்களை அதிகளவில் திறந்துள்ளது எனக் கூறலாம்.
தேசிய மக்கள் சக்தியை தமிழ்க் கட்சிகள் பொது எதிரியாகப் பார்ப்பதால் தமிழ்ப் பிரதேசங்களில் அதற்கு சவால்கள் அதிகம் எனலாம். பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ்க் கட்சிகளிடமோ, சிவில் தரப்பினரிடமோ தேசிய மக்கள் சக்தி பற்றி பெரிய விழிப்பு நிலை இருக்கவில்லை. அக்கட்சி வடக்கில் முதன்மை நிலையைப் பெறும் என கனவிலும் நினைக்கவில்லை. தப்பித்தவறி ஒரு ஆசனத்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் என்றே அவர்கள் கருதினர்.
தேர்தல் முடிவுகள் கண்டு அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினரும் ஆடிப் போய்விட்டனர் என்றே கூறலாம். இது ஒரு வகையில் தேசிய மக்கள் சக்தியின் மௌனப்புரட்சி எனலாம்.
பாராளுமன்றத் தேர்தல் அனுபவம் காரணமாக உள்ளூராட்சிச் சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கட்சிகள் சிவில் தரப்பு, புலம்பெயர் தரப்பு என அனைத்தும் விழித்துக் கொண்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி தமிழ்த் தேசிய அரசியலின் இருப்பையே ஆட்டம் காணச் செய்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் படையெடுப்பை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் புறப் பிரச்சினையாகவும், தமிழ்க் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திகளை அகப்பிரச்சினையாகவும், பார்க்கும் பார்வைகளும் விரிவடையத் தொடங்கியுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பண்பு மாற்றத்திற்கும் இதுதான் காரணம். தமிழ்க் கட்சிகள் மீதான அதிருப்திகளுக்கு அப்பால் கட்சிகளிலுள்ள சிறந்த வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கையும் தற்போது ஊடகங்களில் வெளியிடப்படுகின்றது.
தமிழ்க் கட்சிகளிலுள்ள வேட்பாளர்களில் சிறந்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்ற கருத்து திரிபடைந்து தமிழ்த் தேசியத்திற்கும் இந்த தேர்தலுக்கும் தொடர்பில்லை. கிராம அபிவிருத்தி தான் முக்கியமானது. அதனைக் கருத்தில் கொண்டு வாக்களியுங்கள் என்ற கருத்தும் முன்னிலைக்கு வந்தது. ஆய்வாளர் நிலாந்தன் அதனை நிராகரித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் வாராந்த பத்திரிகையிலும் வலைத்தளங்களிலும் அக் கட்டுரை வெளிவந்திருந்தது. அவர் கட்டுரையில் பின்வருமாறு கூறுகின்றார்
“அசமத்துவங்கள் கிராமங்களில் தான் அதிகமாக உள்ளன. மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்கு அசமத்துவங்கள் தடையானதாகும். அசமத்துவங்களைக் கடந்து தேசமாகத் திரட்டும் பணி கிராமங்களிலிருந்தே ஆரம்பமாக வேண்டும்.
அதாவது தமிழ்த் தேசியவாத அரசியல் கிராமங்களிலிருந்து தான் தொடங்க வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் அதற்குரியவைதான். உள்ளூர் உணர்வை பிரதிபலிப்பது தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிராக இருக்க முடியாது. அது தமிழ்த் தேசியக் கூட்டுணர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். உள்ளூர் அபிவிருத்தி தொடர்பாக பொருத்தமான தரிசனங்களைக் கொண்டவர்களும் உள்ளனர்.
அசமத்துவங்களை நீக்கி ஊர் மட்டத்தில் தேசிய ஐக்கியத்தை, தேசியக் கூட்டுணர்வைக் கட்டியெழுப்பக் கூடியவர்களும் தான் தேர்தலில் நிற்க்க வேண்டும். அங்கிருந்து தொடங்கி மாவட்ட, மாகாண மட்டத்திலும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது ஒவ்வொரு அசைவும் தம்மைத் தேசமாக்கி திரட்டும் நோக்கத்தைக் கொண்டதாக அமைய வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியம் பேசக்கூடாது என்பது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதே! தேச நிர்மாணம், தேசத்தை கட்டி எழுப்புதல் என்பது தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தான். உள்ளூராட்சி சபைகளில் இனப் பிரச்சினையை பேசக்கூடாது என்பது தையிட்டி விகாரையில் இருந்து இன அரசியலை அகற்றுவோம் என்ற ஜனாதிபதி அனுராவின் கோரிக்கைக்கு நிகரானது.”
கடந்த காலங்களில் தேசியக் கூட்டுணர்வைக் கட்டியெழுப்பியவர்களும் அதேவேளை அபவிருத்தி தொடர்பான பொருத்தமான தரிசனங்களைக் கொண்டவர்களும் உள்ளூராட்சிச் சபைகளில் செயலாற்றியிருக்கின்றனர். யாழ் நகர மேஜராக பதவி வகித்த மணிவண்ணன், வலிகாமம் கிழக்கு தவிசாளராக பதவி வகித்த தியாகராசா நிரோஸ் ஆகியோரை உதாரணங்களாகக் கூறலாம்.
மணிவண்ணன் தேசியக் கூட்டுணர்வை ஒருபோதும் கைவிடவில்லை. அதே வேளை சமூக முதலீடு என்ற புதிய அம்சத்தையும் ஆரம்பித்து வைத்தார். ஆரியகுளம் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நிதித் தேவைகளுக்கு அவர் அரசாங்கத்தில் தங்கியிருக்கவில்லை. மாநகர நிதியினையும் சமூக நிதியினையுமே அதற்கு பயன்படுத்தியிருந்தார். வேறு கட்சிகளைக் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி உதவி வழங்க மாட்டாது என்ற கருத்துக்கு மணிவண்ணன் “உங்களது நிதியை உங்களோடு வைத்திருங்கள் அது எமக்குத் தேவையில்லை” எனக் கூறியிருக்கின்றார். நிரோசும் இரண்டு இலக்குகளிலும் பின் நிற்கவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் நோக்கம் பாராளுமன்றத் தேர்தல் வெற்றியை உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது தான். இந்த அடுத்த கட்டம் என்பது தமிழ்த் தேசிய அரசியலை பெருந்தேசிய வாதத்திற்குள் கரைப்பது தான். பாராளுமன்ற தேர்தல் வெற்றி தமிழ்த் தேசியத்தை தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்திக்கு கொடுத்துள்ளது. தமிழ்த் தரப்பு என்பது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டுமல்ல என்பதை டில்லியிலும், ஜெனிவாவிலும் ஐ.நா.விலும் கூறத் தொடங்கிவிட்டனர்.
“வெற்றி நமதே ஊரும் நமதே” என்ற அவர்களது கோசப்படி ஊரும் அவர்களிடம் சென்று விட்டால்; தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாகத் கருதவில்லை எனக் கூறத் தொடங்கி விடுவர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட ஒரு வாக்கு குறைந்தாலும் தேசிய மக்கள் சக்திக்கு தோல்விதான். இதனால் ஒரு வாக்காவது கூடப் பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கூடாரமடிக்கத் தொடங்கி விட்டனர்
பிரதமர் ஹரிணி கிளிநொச்சியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார். தமிழ் அரசியலின் தலைமையிடமாக யாழ்ப்பாணம் இருப்பதாலேயே தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதி கூடிய கவனத்தை செலுத்துகின்றது. முக்கியமாக மாநகர சபை வெற்றியை அது பெரிதும் குறி வைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி இனவாதமில்லாத கட்சி என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அது தவறான வாதமாகும். சிங்களக் கட்சிகள் எதுவும் இனவாதமில்லாமல் அங்கு பிழைக்க முடியாது. சிங்கள சமூக உருவாக்கம் பேரினவாத கருத்து நிலையினாலேயே கட்டியெழுப்பப்பட்டது. அதிலிருந்து சிங்கள அரசுருவாக்கம் இடம்பெற்றது. இதனால் அரச அதிகாரத்தை வேண்டி நிற்கும் எந்த சிங்கள கட்சியும் பேரினவாத கருத்து நிலைகளிலிருந்து விடுபட முடியாது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் தீர்வு என்ற அடிப்படை பிரச்சனை, இன அழிப்புக்கு பொறுப்பு கூறும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சனை, காணிப்பறிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் போன்ற எந்த ஒரு விடயத்திலும் சிறிய முன்னேற்றத்தைக் கூட தேசிய மக்கள் சக்தி காட்டவில்லை. தையிட்டியில் புதிய கட்டிடம் முளைத்ததும் தேசிய மக்கள் சக்திக்கு தெரியாது எனக் கூற முடியாது. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எந்த சுயாதீனமும் இல்லை. வெறும் பொம்மைகளாகவே உள்ளனர்
அனுரகுமார திசநாயக்கா மீதுள்ள கவர்ச்சி மட்டும் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க மாட்டாது.
தேசிய மக்கள் சக்திக்கு தெற்கில் பெரிய சவால்கள் கிடையாது. அங்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. சஜித் பிறேமதாசா தன்னை ஒரு ஆளுமை உள்ள தலைவராக இன்னமும் காட்டவில்லை. ஏனைய கட்சிகள் வழக்கு நடவடிக்கைகளினால் தள்ளாடுகின்றன.
தேசிய மக்கள் சக்திக்கு சவாலாக இருக்கப் போவது வடக்குத்தான். அதுவும் யாழ்ப்பாணம் தான். கிழக்கின் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி தன்னை தக்க வைத்துக் கொள்ளும். அங்கு எந்த ஒரு தமிழ் உள்ளூராட்சி சபையிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியாளராக இல்லை. வன்னியும் பெரிய நெருக்கடியைக் கொடுக்க மாட்டாது. எல்லை மாவட்டங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு பிரச்சனையை எதிர்நோக்கி இருப்பதால் அங்கு விழிப்பு நிலை சற்று அதிகமாக இருக்கின்றது எனக் கூறலாம்.
தேசிய மக்கள் சக்தி தமிழர் தாயகத்தில் மேல்நிலை பெறுவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இது விடயத்தில் மக்களின் கோபம் நியாயமானது. குடும்பத்திற்குள் பிரச்சினை என்பதற்காக பக்கத்து வீட்டுக்காரன் வீட்டை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் அகப்பிரச்சனைக்கும் , புறப்பிரச்சனைக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ளல் அவசியம். தமிழ்த் தேசியக் கட்சிகளின் மீதான அதிருப்தி உயர் நிலையில் இருந்தாலும் அது அகப்பிரச்சினையே! தேசிய மக்கள் சக்தியின் ஆக்கிரமிப்பு என்பது புறப்பிரச்சினை அது தமிழ் மக்களின் இருப்பை அடியோடு அழித்து விடும்.
தேசிய மக்களின் சக்தி ஒரு இடதுசாரிக் கட்சிக் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. அது உண்மையில் இடதுசாரிக் கட்சியல்ல. இடதுசாரி முலாம் பூசப்பட்ட பேரினவாதக் கட்சி. புலம்பெயர் தரப்பில் சிலரும் இந்த முலாம் பூசலைப் பார்த்து மயங்கியுள்ளனன் ; அது இடதுசாரிக் கட்சியாக இருந்தால் எப்பவோ தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்திருக்கும். தேசிய இனத்தின் இறைமையை அங்கீகரித்திருக்கும். சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்திருக்கும். வடக்கு - கிழக்கு இணைப்பை அகற்றுவதற்கு துணை போயிருக்காது. சுனாமி பொதுக்கட்டமைப்பை குழப்பியிருக்காது. படைக்கு 25000; சிங்கள இளைஞர்கள் சேர்த்து கொடுத்திருக்காது நோர்வேயின் சமாதான முயற்சிகளைக் குழப்பியிருக்காது. மற்றைய சிங்களக் கட்சிகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முயலவில்லை. தேசிய மக்கள் சக்தியை ஏனைய சிங்களக் கட்சிகளை விட மோசமான இனவாத கட்சி என்றே கூறலாம்.
தமிழ் மக்கள் இன்று கட்டுறுதியான அரசியல் சமூகமாக இல்லை என்பது உண்மையானதே! அதற்குக் காரணம் தமிழ்க் கட்சிகள் தான். நபர்கள் என்று பார்க்கும் போது சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் குற்றவாளிகள் தான் ; இவர்களில் கஜேந்திரகுமார் உண்மையைப் புரிந்து கொண்டு சரியான தளத்திற்கு வந்திருக்கின்றார். ஒருங்கிணைந்த அரசியலுக்கு தானாகவே முயற்சி செய்கின்றார். சிறியளவில் அந்த முயற்சி தொடர்பாக வெற்றியும் பெற்றிருக்கின்றார். “தமிழ்த் தேசியப் பேரவை” என்கின்ற ஒருங்கிணைந்த அரசியல் இயக்கம் இன்று உருவாகியுள்ளது. இது சற்று ஆறுதல் தான். இது இன்னமும் விரிவடைய வேண்டும்.
சுமந்திரன் இன்னமும் மாறவேயில்லை. வருங்காலத்தில் மாறுவார் என எதிர்பார்க்கவும் முடியாது. தேர்தல் முடிந்தவுடன் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி நிர்வாகத்தை கைப்பற்றப் போவதாகவும் ஒரு கதை அடிபடுகின்றது. இது உண்மையானால் தானாகவே தமிழ்த் தேசிய அரசியல் பெருந்தேசிய வாதத்துடன் கரைந்து விடும்
மொத்தத்தில் இந்தத் தேர்தல் தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டிய தேர்தல். இதில் கொஞ்சம் சறுக்கினாலும் தமிழ் மக்களின் எதிர்காலம் இருண்டதாகி விடும்.
வரலாறு முன்நோக்கிச் செல்லும் என் நம்புவோமாக!
உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் விழிக்காவிட்டால் தமிழ்த் தேசிய அரசியல் பெருந்தேசிய வாதத்துடன் கரைந்து விடும் - சி.அ.யோதிலிங்கம் தெரிவிப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியம் பேசக்கூடாது என்பது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதே என்று அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன் முழு விபரமும் வருமாறு உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களம் தமிழர் தாயகத்தில் தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் வலைத்தளங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்ட வேட்பாளர்கள் தற்போது நேரடிப் பிரச்சாரத்தையும் ஆரம்பித்து விட்டனர். வேட்பாளர்களது தேர்தல் அலுவலகங்களும் கிராமங்களில் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்திற்கு முரணாக வேட்பாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுகின்றன. பிரதான வீதிகளில் உள்ள சுவரொட்டிகளை பொலிசார் அகற்றினாலும், உள்வீதிகளில் சுவரொட்டிகள் அப்படியே இருக்கின்றன. தேர்தல் விதிகளின்படி சுவரொட்டிப் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாது. வேட்பாளர்கள் சுவரொட்டிகளை அவரது அலுவலகத்தில் மட்டும் காட்சிக்கு வைத்திருக்கலாம்.தாயகத்தில் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டங்கள் மட்டும் மண்டபங்களில் இடம்பெறுகின்றன. திறந்தவெளிப் பிரச்சாரக் கூட்டங்களை இன்னமும் ஆரம்பமாகவில்லை. தமிழத்தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்கட்சி போன்றவை ஆங்காங்கே அறிமுகக் கூட்டங்களை நடாத்தியுள்ளன. அனைத்து உள்ளூராட்சி சபைகள் தொடர்பாகவும் இவ் அறிமுகக் கூட்டங்கள் இடம்பெற்றதாக கூறமுடியாது.தேசிய மக்கள் சக்தி தேர்தல் அலுவலகங்களை அதிகளவில் திறந்துள்ளது எனக் கூறலாம். தேசிய மக்கள் சக்தியை தமிழ்க் கட்சிகள் பொது எதிரியாகப் பார்ப்பதால் தமிழ்ப் பிரதேசங்களில் அதற்கு சவால்கள் அதிகம் எனலாம். பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ்க் கட்சிகளிடமோ, சிவில் தரப்பினரிடமோ தேசிய மக்கள் சக்தி பற்றி பெரிய விழிப்பு நிலை இருக்கவில்லை. அக்கட்சி வடக்கில் முதன்மை நிலையைப் பெறும் என கனவிலும் நினைக்கவில்லை. தப்பித்தவறி ஒரு ஆசனத்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் என்றே அவர்கள் கருதினர்.தேர்தல் முடிவுகள் கண்டு அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினரும் ஆடிப் போய்விட்டனர் என்றே கூறலாம். இது ஒரு வகையில் தேசிய மக்கள் சக்தியின் மௌனப்புரட்சி எனலாம். பாராளுமன்றத் தேர்தல் அனுபவம் காரணமாக உள்ளூராட்சிச் சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கட்சிகள் சிவில் தரப்பு, புலம்பெயர் தரப்பு என அனைத்தும் விழித்துக் கொண்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி தமிழ்த் தேசிய அரசியலின் இருப்பையே ஆட்டம் காணச் செய்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது.தேசிய மக்கள் சக்தியின் படையெடுப்பை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் புறப் பிரச்சினையாகவும், தமிழ்க் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திகளை அகப்பிரச்சினையாகவும், பார்க்கும் பார்வைகளும் விரிவடையத் தொடங்கியுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பண்பு மாற்றத்திற்கும் இதுதான் காரணம். தமிழ்க் கட்சிகள் மீதான அதிருப்திகளுக்கு அப்பால் கட்சிகளிலுள்ள சிறந்த வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கையும் தற்போது ஊடகங்களில் வெளியிடப்படுகின்றது.தமிழ்க் கட்சிகளிலுள்ள வேட்பாளர்களில் சிறந்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்ற கருத்து திரிபடைந்து தமிழ்த் தேசியத்திற்கும் இந்த தேர்தலுக்கும் தொடர்பில்லை. கிராம அபிவிருத்தி தான் முக்கியமானது. அதனைக் கருத்தில் கொண்டு வாக்களியுங்கள் என்ற கருத்தும் முன்னிலைக்கு வந்தது. ஆய்வாளர் நிலாந்தன் அதனை நிராகரித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் வாராந்த பத்திரிகையிலும் வலைத்தளங்களிலும் அக் கட்டுரை வெளிவந்திருந்தது. அவர் கட்டுரையில் பின்வருமாறு கூறுகின்றார் “அசமத்துவங்கள் கிராமங்களில் தான் அதிகமாக உள்ளன. மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்கு அசமத்துவங்கள் தடையானதாகும். அசமத்துவங்களைக் கடந்து தேசமாகத் திரட்டும் பணி கிராமங்களிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். அதாவது தமிழ்த் தேசியவாத அரசியல் கிராமங்களிலிருந்து தான் தொடங்க வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் அதற்குரியவைதான். உள்ளூர் உணர்வை பிரதிபலிப்பது தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிராக இருக்க முடியாது. அது தமிழ்த் தேசியக் கூட்டுணர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். உள்ளூர் அபிவிருத்தி தொடர்பாக பொருத்தமான தரிசனங்களைக் கொண்டவர்களும் உள்ளனர். அசமத்துவங்களை நீக்கி ஊர் மட்டத்தில் தேசிய ஐக்கியத்தை, தேசியக் கூட்டுணர்வைக் கட்டியெழுப்பக் கூடியவர்களும் தான் தேர்தலில் நிற்க்க வேண்டும். அங்கிருந்து தொடங்கி மாவட்ட, மாகாண மட்டத்திலும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது ஒவ்வொரு அசைவும் தம்மைத் தேசமாக்கி திரட்டும் நோக்கத்தைக் கொண்டதாக அமைய வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியம் பேசக்கூடாது என்பது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதே தேச நிர்மாணம், தேசத்தை கட்டி எழுப்புதல் என்பது தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தான். உள்ளூராட்சி சபைகளில் இனப் பிரச்சினையை பேசக்கூடாது என்பது தையிட்டி விகாரையில் இருந்து இன அரசியலை அகற்றுவோம் என்ற ஜனாதிபதி அனுராவின் கோரிக்கைக்கு நிகரானது.” கடந்த காலங்களில் தேசியக் கூட்டுணர்வைக் கட்டியெழுப்பியவர்களும் அதேவேளை அபவிருத்தி தொடர்பான பொருத்தமான தரிசனங்களைக் கொண்டவர்களும் உள்ளூராட்சிச் சபைகளில் செயலாற்றியிருக்கின்றனர். யாழ் நகர மேஜராக பதவி வகித்த மணிவண்ணன், வலிகாமம் கிழக்கு தவிசாளராக பதவி வகித்த தியாகராசா நிரோஸ் ஆகியோரை உதாரணங்களாகக் கூறலாம்.மணிவண்ணன் தேசியக் கூட்டுணர்வை ஒருபோதும் கைவிடவில்லை. அதே வேளை சமூக முதலீடு என்ற புதிய அம்சத்தையும் ஆரம்பித்து வைத்தார். ஆரியகுளம் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நிதித் தேவைகளுக்கு அவர் அரசாங்கத்தில் தங்கியிருக்கவில்லை. மாநகர நிதியினையும் சமூக நிதியினையுமே அதற்கு பயன்படுத்தியிருந்தார். வேறு கட்சிகளைக் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி உதவி வழங்க மாட்டாது என்ற கருத்துக்கு மணிவண்ணன் “உங்களது நிதியை உங்களோடு வைத்திருங்கள் அது எமக்குத் தேவையில்லை” எனக் கூறியிருக்கின்றார். நிரோசும் இரண்டு இலக்குகளிலும் பின் நிற்கவில்லை. தேசிய மக்கள் சக்தியின் நோக்கம் பாராளுமன்றத் தேர்தல் வெற்றியை உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது தான். இந்த அடுத்த கட்டம் என்பது தமிழ்த் தேசிய அரசியலை பெருந்தேசிய வாதத்திற்குள் கரைப்பது தான். பாராளுமன்ற தேர்தல் வெற்றி தமிழ்த் தேசியத்தை தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்திக்கு கொடுத்துள்ளது. தமிழ்த் தரப்பு என்பது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டுமல்ல என்பதை டில்லியிலும், ஜெனிவாவிலும் ஐ.நா.விலும் கூறத் தொடங்கிவிட்டனர். “வெற்றி நமதே ஊரும் நமதே” என்ற அவர்களது கோசப்படி ஊரும் அவர்களிடம் சென்று விட்டால்; தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாகத் கருதவில்லை எனக் கூறத் தொடங்கி விடுவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட ஒரு வாக்கு குறைந்தாலும் தேசிய மக்கள் சக்திக்கு தோல்விதான். இதனால் ஒரு வாக்காவது கூடப் பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கூடாரமடிக்கத் தொடங்கி விட்டனர்பிரதமர் ஹரிணி கிளிநொச்சியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார். தமிழ் அரசியலின் தலைமையிடமாக யாழ்ப்பாணம் இருப்பதாலேயே தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதி கூடிய கவனத்தை செலுத்துகின்றது. முக்கியமாக மாநகர சபை வெற்றியை அது பெரிதும் குறி வைத்துள்ளது. தேசிய மக்கள் சக்தி இனவாதமில்லாத கட்சி என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அது தவறான வாதமாகும். சிங்களக் கட்சிகள் எதுவும் இனவாதமில்லாமல் அங்கு பிழைக்க முடியாது. சிங்கள சமூக உருவாக்கம் பேரினவாத கருத்து நிலையினாலேயே கட்டியெழுப்பப்பட்டது. அதிலிருந்து சிங்கள அரசுருவாக்கம் இடம்பெற்றது. இதனால் அரச அதிகாரத்தை வேண்டி நிற்கும் எந்த சிங்கள கட்சியும் பேரினவாத கருத்து நிலைகளிலிருந்து விடுபட முடியாது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் தீர்வு என்ற அடிப்படை பிரச்சனை, இன அழிப்புக்கு பொறுப்பு கூறும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சனை, காணிப்பறிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் போன்ற எந்த ஒரு விடயத்திலும் சிறிய முன்னேற்றத்தைக் கூட தேசிய மக்கள் சக்தி காட்டவில்லை. தையிட்டியில் புதிய கட்டிடம் முளைத்ததும் தேசிய மக்கள் சக்திக்கு தெரியாது எனக் கூற முடியாது. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எந்த சுயாதீனமும் இல்லை. வெறும் பொம்மைகளாகவே உள்ளனர்அனுரகுமார திசநாயக்கா மீதுள்ள கவர்ச்சி மட்டும் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க மாட்டாது.தேசிய மக்கள் சக்திக்கு தெற்கில் பெரிய சவால்கள் கிடையாது. அங்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. சஜித் பிறேமதாசா தன்னை ஒரு ஆளுமை உள்ள தலைவராக இன்னமும் காட்டவில்லை. ஏனைய கட்சிகள் வழக்கு நடவடிக்கைகளினால் தள்ளாடுகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு சவாலாக இருக்கப் போவது வடக்குத்தான். அதுவும் யாழ்ப்பாணம் தான். கிழக்கின் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி தன்னை தக்க வைத்துக் கொள்ளும். அங்கு எந்த ஒரு தமிழ் உள்ளூராட்சி சபையிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியாளராக இல்லை. வன்னியும் பெரிய நெருக்கடியைக் கொடுக்க மாட்டாது. எல்லை மாவட்டங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு பிரச்சனையை எதிர்நோக்கி இருப்பதால் அங்கு விழிப்பு நிலை சற்று அதிகமாக இருக்கின்றது எனக் கூறலாம்.தேசிய மக்கள் சக்தி தமிழர் தாயகத்தில் மேல்நிலை பெறுவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இது விடயத்தில் மக்களின் கோபம் நியாயமானது. குடும்பத்திற்குள் பிரச்சினை என்பதற்காக பக்கத்து வீட்டுக்காரன் வீட்டை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் அகப்பிரச்சனைக்கும் , புறப்பிரச்சனைக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ளல் அவசியம். தமிழ்த் தேசியக் கட்சிகளின் மீதான அதிருப்தி உயர் நிலையில் இருந்தாலும் அது அகப்பிரச்சினையே தேசிய மக்கள் சக்தியின் ஆக்கிரமிப்பு என்பது புறப்பிரச்சினை அது தமிழ் மக்களின் இருப்பை அடியோடு அழித்து விடும். தேசிய மக்களின் சக்தி ஒரு இடதுசாரிக் கட்சிக் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. அது உண்மையில் இடதுசாரிக் கட்சியல்ல. இடதுசாரி முலாம் பூசப்பட்ட பேரினவாதக் கட்சி. புலம்பெயர் தரப்பில் சிலரும் இந்த முலாம் பூசலைப் பார்த்து மயங்கியுள்ளனன் ; அது இடதுசாரிக் கட்சியாக இருந்தால் எப்பவோ தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்திருக்கும். தேசிய இனத்தின் இறைமையை அங்கீகரித்திருக்கும். சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்திருக்கும். வடக்கு - கிழக்கு இணைப்பை அகற்றுவதற்கு துணை போயிருக்காது. சுனாமி பொதுக்கட்டமைப்பை குழப்பியிருக்காது. படைக்கு 25000; சிங்கள இளைஞர்கள் சேர்த்து கொடுத்திருக்காது நோர்வேயின் சமாதான முயற்சிகளைக் குழப்பியிருக்காது. மற்றைய சிங்களக் கட்சிகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முயலவில்லை. தேசிய மக்கள் சக்தியை ஏனைய சிங்களக் கட்சிகளை விட மோசமான இனவாத கட்சி என்றே கூறலாம். தமிழ் மக்கள் இன்று கட்டுறுதியான அரசியல் சமூகமாக இல்லை என்பது உண்மையானதே அதற்குக் காரணம் தமிழ்க் கட்சிகள் தான். நபர்கள் என்று பார்க்கும் போது சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் குற்றவாளிகள் தான் ; இவர்களில் கஜேந்திரகுமார் உண்மையைப் புரிந்து கொண்டு சரியான தளத்திற்கு வந்திருக்கின்றார். ஒருங்கிணைந்த அரசியலுக்கு தானாகவே முயற்சி செய்கின்றார். சிறியளவில் அந்த முயற்சி தொடர்பாக வெற்றியும் பெற்றிருக்கின்றார். “தமிழ்த் தேசியப் பேரவை” என்கின்ற ஒருங்கிணைந்த அரசியல் இயக்கம் இன்று உருவாகியுள்ளது. இது சற்று ஆறுதல் தான். இது இன்னமும் விரிவடைய வேண்டும். சுமந்திரன் இன்னமும் மாறவேயில்லை. வருங்காலத்தில் மாறுவார் என எதிர்பார்க்கவும் முடியாது. தேர்தல் முடிந்தவுடன் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி நிர்வாகத்தை கைப்பற்றப் போவதாகவும் ஒரு கதை அடிபடுகின்றது. இது உண்மையானால் தானாகவே தமிழ்த் தேசிய அரசியல் பெருந்தேசிய வாதத்துடன் கரைந்து விடும்மொத்தத்தில் இந்தத் தேர்தல் தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டிய தேர்தல். இதில் கொஞ்சம் சறுக்கினாலும் தமிழ் மக்களின் எதிர்காலம் இருண்டதாகி விடும்.வரலாறு முன்நோக்கிச் செல்லும் என் நம்புவோமாக