• Sep 21 2024

ஆபத்து ஏற்பட்டால் நீங்களே பொறுப்பு..! தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு அவசர அறிவித்தல்

Chithra / May 29th 2024, 9:14 am
image

Advertisement

 

அபாயகரமான மரங்கள் அமைந்துள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு இன்று (29) முதல் சட்ட அறிவித்தல் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தனியார் காணிகள் மற்றும் அரச நிறுவன காணிகளில் மரங்கள் விழுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் வரும் நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளர், பொது நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது குடியிருப்பாளர்கள் இருந்தால், அவர்களின் நிலத்தில் உள்ள அனைத்து சொத்துக்களுக்கும் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு கூறும் உரிமை அவர்களுக்கு உள்ளது.

அதன்படி, தங்களது காணிகளில் உள்ள மரங்கள் பாதுகாப்பற்றதாக இருந்தால், அதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த சட்டப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்து ஏற்பட்டால் நீங்களே பொறுப்பு. தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு அவசர அறிவித்தல்  அபாயகரமான மரங்கள் அமைந்துள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு இன்று (29) முதல் சட்ட அறிவித்தல் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.தனியார் காணிகள் மற்றும் அரச நிறுவன காணிகளில் மரங்கள் விழுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் வரும் நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளர், பொது நிறுவனம், தனியார் நிறுவனம் அல்லது குடியிருப்பாளர்கள் இருந்தால், அவர்களின் நிலத்தில் உள்ள அனைத்து சொத்துக்களுக்கும் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு கூறும் உரிமை அவர்களுக்கு உள்ளது.அதன்படி, தங்களது காணிகளில் உள்ள மரங்கள் பாதுகாப்பற்றதாக இருந்தால், அதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த சட்டப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement