• Nov 28 2024

மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும்- சித்தார்த்தன் வலியுறுத்து..!

Sharmi / Oct 22nd 2024, 6:09 pm
image

ஜனநாய தமிழ்த்தேசியக்கூட்டணி தேர்தலில் பலமானதொரு கட்சியாக மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில், ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐந்து கட்சிகள் சேர்ந்து போட்டியிடுகின்றோம் .

தமிழ் தேசிய பரப்பில் பலமான கட்சியாக மக்கள் எமக்கு ஆதரவு தருகின்ற வேளை முன்புபோல் இல்லாது தமிழ் மக்களின் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்போம்.

தற்போதைய  அரசாங்கம் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு எவ்வாறு செயற்படும் என்பது தெரியாது. 

அநுர ஜனாதிபதியுடன் பேசக்கூடிய நெருக்கம் இருக்கும் வேளை பேசி நியாயமான தீர்வைப்பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.


மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும்- சித்தார்த்தன் வலியுறுத்து. ஜனநாய தமிழ்த்தேசியக்கூட்டணி தேர்தலில் பலமானதொரு கட்சியாக மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி பரந்தன் பகுதியில், ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், ஐந்து கட்சிகள் சேர்ந்து போட்டியிடுகின்றோம் .தமிழ் தேசிய பரப்பில் பலமான கட்சியாக மக்கள் எமக்கு ஆதரவு தருகின்ற வேளை முன்புபோல் இல்லாது தமிழ் மக்களின் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்போம். தற்போதைய  அரசாங்கம் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு எவ்வாறு செயற்படும் என்பது தெரியாது. அநுர ஜனாதிபதியுடன் பேசக்கூடிய நெருக்கம் இருக்கும் வேளை பேசி நியாயமான தீர்வைப்பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement