• Mar 14 2025

குரங்குகளை பிடித்து கொடுத்தால் ரொக்கப்பணம்! அரசிடம் முன்மொழிந்த எதிர்க்கட்சி

Chithra / Mar 13th 2025, 8:05 am
image


விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தீர்வாக டோக் குரங்குகளைப் பிடிக்கும், பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 500 அல்லது 1,000 ருபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா அரசாங்கத்திடம் முன்மொழிந்தார்.

கணக்கெடுப்பை காட்டிலும் இது சிறந்த வழி என்று அவர் நாடாளுமன்றில் நேற்று சுட்டிக்காட்டியுள்ளார். 

விலங்குகளால் ஏற்படும் சேதத்தின் பெறுமதியை கருத்தில் கொள்ளும்போது, ​​இதற்காக சிறிது பணத்தைச் செலவிடுவது பெரிய பிரச்சினை அல்ல.

பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில நிபுணர்கள் 2015 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்திற்கு குரங்குகளை கருத்தடை செய்யவோ அல்லது டோக் குரங்குகளை பொருத்தமான இடத்தில் அடைத்து வைக்கவோ முன்மொழிந்தனர். 


எனினும், அதிக செலவுகள் காரணமாக அந்த திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கத்தால் இந்தப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வைக் காண முடிந்தால், அதிக செலவுகள் என்ற பிரச்சினை தொடராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

குரங்குகளை பிடித்து கொடுத்தால் ரொக்கப்பணம் அரசிடம் முன்மொழிந்த எதிர்க்கட்சி விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தீர்வாக டோக் குரங்குகளைப் பிடிக்கும், பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 500 அல்லது 1,000 ருபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா அரசாங்கத்திடம் முன்மொழிந்தார்.கணக்கெடுப்பை காட்டிலும் இது சிறந்த வழி என்று அவர் நாடாளுமன்றில் நேற்று சுட்டிக்காட்டியுள்ளார். விலங்குகளால் ஏற்படும் சேதத்தின் பெறுமதியை கருத்தில் கொள்ளும்போது, ​​இதற்காக சிறிது பணத்தைச் செலவிடுவது பெரிய பிரச்சினை அல்ல.பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில நிபுணர்கள் 2015 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்திற்கு குரங்குகளை கருத்தடை செய்யவோ அல்லது டோக் குரங்குகளை பொருத்தமான இடத்தில் அடைத்து வைக்கவோ முன்மொழிந்தனர். எனினும், அதிக செலவுகள் காரணமாக அந்த திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை.தற்போதைய அரசாங்கத்தால் இந்தப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வைக் காண முடிந்தால், அதிக செலவுகள் என்ற பிரச்சினை தொடராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement