• Nov 10 2024

அரசாங்கத்தின் கொள்கையினை சரியாக மதித்து நடக்க தவறினால் நாடு மீண்டும் அமிழ்ந்துவிடும்...! பிள்ளையான் சுட்டிக்காட்டு...!

Sharmi / Jul 16th 2024, 2:56 pm
image

நாட்டிற்காக நாங்கள் அர்ப்பணித்து செயலாற்ற முன்வரவேண்டும்.இல்லையென்றால் முன்னெடுக்கும் கடையடைப்பும் போராட்டங்களும் எதிர்கால குழந்தைகளையே பாதிக்கும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின், 2024ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் திறப்பு விழா மற்றும் பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு நேற்று(15)  மாலை பாடசாலை அதிபர் அருமைத்துரை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு, நுழைவாயிலையத் திறந்து வைத்ததோடு, பாடசாலையின் பெயர்ப் பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

நாங்கள் அனைவரும் திட்டமிட்டு சரியாக செயலாற்றினால் அடுத்த மூன்று ஐந்து வருடங்களில் அனைவருக்கும் உயர்ச்சியும் சம்பள அதிகரிப்புகளும் முக்கியமாக இளைஞர் ,யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.

அனுபவம் இல்லாதவர்களின் கதைகளை கேட்டு அரசாங்கத்தின் கொள்கையினை சரியாக மதித்து நடக்க தவறினால் நாடு மீண்டும் அமிழ்ந்துவிடும். அறிவுபூர்வமான வகையில் ஆசிரிய சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள் தீர்மானங்களை எடுத்து ஒத்துழைப்பினை அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில், மதத் தலைவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு வலய பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கரணியா சுபாகரன், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், வலயக் கல்வி அதிகாரிகள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


அரசாங்கத்தின் கொள்கையினை சரியாக மதித்து நடக்க தவறினால் நாடு மீண்டும் அமிழ்ந்துவிடும். பிள்ளையான் சுட்டிக்காட்டு. நாட்டிற்காக நாங்கள் அர்ப்பணித்து செயலாற்ற முன்வரவேண்டும்.இல்லையென்றால் முன்னெடுக்கும் கடையடைப்பும் போராட்டங்களும் எதிர்கால குழந்தைகளையே பாதிக்கும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின், 2024ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் திறப்பு விழா மற்றும் பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு நேற்று(15)  மாலை பாடசாலை அதிபர் அருமைத்துரை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு, நுழைவாயிலையத் திறந்து வைத்ததோடு, பாடசாலையின் பெயர்ப் பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,நாங்கள் அனைவரும் திட்டமிட்டு சரியாக செயலாற்றினால் அடுத்த மூன்று ஐந்து வருடங்களில் அனைவருக்கும் உயர்ச்சியும் சம்பள அதிகரிப்புகளும் முக்கியமாக இளைஞர் ,யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.அனுபவம் இல்லாதவர்களின் கதைகளை கேட்டு அரசாங்கத்தின் கொள்கையினை சரியாக மதித்து நடக்க தவறினால் நாடு மீண்டும் அமிழ்ந்துவிடும். அறிவுபூர்வமான வகையில் ஆசிரிய சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள் தீர்மானங்களை எடுத்து ஒத்துழைப்பினை அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.நிகழ்வில், மதத் தலைவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு வலய பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கரணியா சுபாகரன், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், வலயக் கல்வி அதிகாரிகள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement