• Nov 13 2025

உடையார்கட்டில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி சுற்றிவளைப்பு - சந்தேகநபர் தப்பியோட்டம்

Chithra / Nov 9th 2025, 3:57 pm
image


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக காட்டு பகுதியில் மறைத்து விற்பனை செய்யப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் மாலை சோதனையினை மேற்கொண்டனர்.

சோதனையின் போது அங்கு இருந்த சந்தேக நபர் பொலிஸாரை கண்டு தப்பியோடியதாகவும், காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 லீற்றர் அளவிலான சட்டவிரோத கசிப்பினை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் தப்பியோடிய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


உடையார்கட்டில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி சுற்றிவளைப்பு - சந்தேகநபர் தப்பியோட்டம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக காட்டு பகுதியில் மறைத்து விற்பனை செய்யப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் மாலை சோதனையினை மேற்கொண்டனர்.சோதனையின் போது அங்கு இருந்த சந்தேக நபர் பொலிஸாரை கண்டு தப்பியோடியதாகவும், காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 லீற்றர் அளவிலான சட்டவிரோத கசிப்பினை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இந்நிலையில் தப்பியோடிய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement