• Nov 23 2024

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் மீட்பு...!

Tamil nila / Mar 4th 2024, 10:49 pm
image

கற்பிட்டி, உச்சமுனை கடற்பகுதி ஊடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்ல முயற்சித்த பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 33 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.



வடமேற்கு கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு கடற்படையினரால் கற்பிட்டி உச்சமுனை கடற்பிரதேசத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திர படகுகளை சோதனை செய்த போதே குறித்த பூச்சி கொல்லி மருந்துகள் கைப்பற்றுள்ளன.

இதன் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் 100 மில்லி லீட்டர் அளவுடைய 4000 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள்ளும், 10 கிராம் அளவுடைய 6534 பூச்சிக்கொல்லி பக்கெட்டுகள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.



மேலும், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட  பூச்சி கொல்லி மருந்து போத்தல்களும், பக்கட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகள் மீட்பு. கற்பிட்டி, உச்சமுனை கடற்பகுதி ஊடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்ல முயற்சித்த பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 33 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.வடமேற்கு கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு கடற்படையினரால் கற்பிட்டி உச்சமுனை கடற்பிரதேசத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திர படகுகளை சோதனை செய்த போதே குறித்த பூச்சி கொல்லி மருந்துகள் கைப்பற்றுள்ளன.இதன் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் 100 மில்லி லீட்டர் அளவுடைய 4000 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள்ளும், 10 கிராம் அளவுடைய 6534 பூச்சிக்கொல்லி பக்கெட்டுகள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு டிங்கி இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட  பூச்சி கொல்லி மருந்து போத்தல்களும், பக்கட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement