• Mar 11 2025

சட்டவிரோத மணல் அகழ்வு - டிப்பரை 40 கிலோமீட்டர் துரத்திச்சென்று கைப்பற்றிய போலீஸார்!

Tamil nila / Dec 18th 2024, 7:23 pm
image

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனமாக ரிப்பரை 40 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று கைப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று  பருத்தித்துறை போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது


  பருத்தித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற ரிப்பர் வாகனத்தை பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த  அமரசிங்க  தலமையிலான போலீஸ் குழுவினர் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். 

அதனை மதிக்காது ரிப்பர் வாகனம் நிறுத்தாது  வேகமாக சென்றுள்ளது.

இந்நிலையில் சுமார் நாற்பது கிலோமீட்டர் வரை குறித்த ரிப்பரை கலைத்துச் சென்றுள்ள நிலையில் மேலும் தப்பிக்க முடியாத நிலையில் ரீப்பர் சாரதி ரிப்பரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில்  குறித்த ரிப்பரை  பருத்தித்துறை போலீசார் கைப்பற்பற்றியுள்ளனர்.


இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை இதேவேளை நேற்றும் இன்றுமாக சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


சட்டவிரோத மணல் அகழ்வு - டிப்பரை 40 கிலோமீட்டர் துரத்திச்சென்று கைப்பற்றிய போலீஸார் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனமாக ரிப்பரை 40 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று கைப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று  பருத்தித்துறை போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  பருத்தித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற ரிப்பர் வாகனத்தை பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த  அமரசிங்க  தலமையிலான போலீஸ் குழுவினர் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். அதனை மதிக்காது ரிப்பர் வாகனம் நிறுத்தாது  வேகமாக சென்றுள்ளது.இந்நிலையில் சுமார் நாற்பது கிலோமீட்டர் வரை குறித்த ரிப்பரை கலைத்துச் சென்றுள்ள நிலையில் மேலும் தப்பிக்க முடியாத நிலையில் ரீப்பர் சாரதி ரிப்பரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.இந்நிலையில்  குறித்த ரிப்பரை  பருத்தித்துறை போலீசார் கைப்பற்பற்றியுள்ளனர்.இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை இதேவேளை நேற்றும் இன்றுமாக சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement