• May 17 2024

சட்டவிரோதமாக நாட்டுக்குள் பீடி இலைகள் கடத்தல் - சிக்கிய இந்தியப் படகுகள்

harsha / Dec 6th 2022, 6:02 pm
image

Advertisement

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 4000 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கொண்ட  . 2 இந்திய மீன்பிடி படகுகள் வடமேற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது   பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 2 இந்திய மீன்பிடி கப்பல்களுடன் எட்டு இந்திய பிரஜைகள்  இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.

 நேற்று இரவு இலங்கை கடற்படைக் கப்பலான "சுரனிமில" கப்பலானது, மேற்குக் கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, ​​கல்பிட்டி, குதிரைமலை முனையிலிருந்து நாட்டின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகத்திற்குரிய இரண்டு இந்திய மீன்பிடிக் கப்பல்கள்  சர்வதேச நீர்நிலைகளில் வைத்து அவதானிக்கப்பட்டு  சோதிக்கப்பட்டன.

அங்கு, 128 பார்சல்களில் பொதி செய்யப்பட்டு  சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 4000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இரண்டு இந்திய மீன்பிடி படகுகளும், எட்டு இந்திய நாட்டவர்களான சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் பீடி இலைகள் கடத்தல் - சிக்கிய இந்தியப் படகுகள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 4000 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கொண்ட  . 2 இந்திய மீன்பிடி படகுகள் வடமேற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.நேற்றைய தினம் இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது   பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 2 இந்திய மீன்பிடி கப்பல்களுடன் எட்டு இந்திய பிரஜைகள்  இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு இலங்கை கடற்படைக் கப்பலான "சுரனிமில" கப்பலானது, மேற்குக் கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, ​​கல்பிட்டி, குதிரைமலை முனையிலிருந்து நாட்டின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகத்திற்குரிய இரண்டு இந்திய மீன்பிடிக் கப்பல்கள்  சர்வதேச நீர்நிலைகளில் வைத்து அவதானிக்கப்பட்டு  சோதிக்கப்பட்டன. அங்கு, 128 பார்சல்களில் பொதி செய்யப்பட்டு  சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 4000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இரண்டு இந்திய மீன்பிடி படகுகளும், எட்டு இந்திய நாட்டவர்களான சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement