கடல் மார்க்கமாக நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான போலி சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரகசிய தகவலின் பேரில் விசேட அதிரடிப்படையினர் அம்பாறை பஸ் நிலையத்தில் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்களை சோதனையிட்ட போது, இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வு தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 115 அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் கூற்றுப்படி, 115 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளில் 1,150 பாக்கெட்டுகள் இருந்தன,
சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிம்புரத்தேவ மற்றும் மொனராகலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
அம்பாறை விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வந்த பொலிஸார், சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போலி சிகரெட்டுகள் மீட்பு. கடல் மார்க்கமாக நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான போலி சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.இன்று அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இரகசிய தகவலின் பேரில் விசேட அதிரடிப்படையினர் அம்பாறை பஸ் நிலையத்தில் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்களை சோதனையிட்ட போது, இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வு தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 115 அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பொலிஸாரின் கூற்றுப்படி, 115 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளில் 1,150 பாக்கெட்டுகள் இருந்தன,சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிம்புரத்தேவ மற்றும் மொனராகலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.அம்பாறை விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வந்த பொலிஸார், சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.