• Jan 15 2025

சட்டவிரோதமாகக் கடல் வழியாக : நாடு திரும்ப முயன்ற 4 பேர் கைது

Tharmini / Dec 11th 2024, 2:16 pm
image

இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாக வர முயன்ற நால்வர் நேற்று (10) இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கட்டப்பிராய், கோப்பாய் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சட்டவிரோதமாகக் சென்று முகாம்களில் தங்கியிருந்தோரே தாயகம் திரும்பும் நோக்கில் படகில் பயணிக்க முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரில் 3 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குகின்றனர்.

நால்வரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு திருச்சி சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது.

சட்டவிரோதமாகக் கடல் வழியாக : நாடு திரும்ப முயன்ற 4 பேர் கைது இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாக வர முயன்ற நால்வர் நேற்று (10) இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கட்டப்பிராய், கோப்பாய் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சட்டவிரோதமாகக் சென்று முகாம்களில் தங்கியிருந்தோரே தாயகம் திரும்பும் நோக்கில் படகில் பயணிக்க முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நால்வரில் 3 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குகின்றனர்.நால்வரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு திருச்சி சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement