சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றும் இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று வாஷிங்டனில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தமது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவு - மீண்டும் அறிவித்த IMF சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றும் இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று வாஷிங்டனில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதையடுத்து கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தமது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.