இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு முதலாவதாக மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய வங்கி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களை சந்திப்பதற்கும் குறித்த குழு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலின் நிறைவில், குறித்த பிரதிநிதிகள் குழு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு, விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பான முன்னேற்றம் குறித்து தெரிவிக்க உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் நான்கு வருட கால நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு முதலாவதாக மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய, குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய வங்கி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களை சந்திப்பதற்கும் குறித்த குழு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான கலந்துரையாடலின் நிறைவில், குறித்த பிரதிநிதிகள் குழு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு, விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பான முன்னேற்றம் குறித்து தெரிவிக்க உள்ளனர். சர்வதேச நாணய நிதியம் நான்கு வருட கால நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.