• May 02 2025

வரவு செலவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச திட்டங்கள் - வலியுறுத்தும் செஹான் சேமசிங்க

Chithra / Feb 17th 2025, 8:46 am
image


சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட வேண்டும் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறோம் என்று ஜனாதிபதியால் குறிப்பிட முடியாது. 

ஏனெனில் 6000 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் வலுவான வெளிநாட்டு கையிருப்புடன் தான் அரசாங்கத்தை ஒப்படைத்தோம்.

பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுத்தது.

அந்த தீர்மானங்களால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

இருப்பினும் வலி மிகுந்த தீர்மானங்களினால் தான் குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது. இதனை மக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. 

நிவாரண வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள்.

 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்க வேண்டுமென மக்கள் குறிப்பிடுகிறார்கள். தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நிவாரணத்தை மாத்திரம் உள்ளடக்கியதாக வரவு செலவுத் திட்டம் அமைய கூடாது.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கியதாக வரவு செலவுத் திட்டம் காணப்பட வேண்டும்.

அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான சிறந்த மூலோபாய திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

வரவு செலவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச திட்டங்கள் - வலியுறுத்தும் செஹான் சேமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட வேண்டும் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.வரவு செலவுத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறோம் என்று ஜனாதிபதியால் குறிப்பிட முடியாது. ஏனெனில் 6000 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் வலுவான வெளிநாட்டு கையிருப்புடன் தான் அரசாங்கத்தை ஒப்படைத்தோம்.பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுத்தது.அந்த தீர்மானங்களால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.இருப்பினும் வலி மிகுந்த தீர்மானங்களினால் தான் குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது. இதனை மக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. நிவாரண வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்க வேண்டுமென மக்கள் குறிப்பிடுகிறார்கள். தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நிவாரணத்தை மாத்திரம் உள்ளடக்கியதாக வரவு செலவுத் திட்டம் அமைய கூடாது.பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கியதாக வரவு செலவுத் திட்டம் காணப்பட வேண்டும்.அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான சிறந்த மூலோபாய திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now