• Sep 21 2024

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள பொருட்கள்!

Chithra / Jan 14th 2023, 8:26 am
image

Advertisement

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி இலக்கம் 2307/12 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் அரசாங்க நிதிக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

விளையாட்டுப் பொருட்கள், புகையிரத உதிரி பாகங்கள், அழகுகலை தொழில் துறையில் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் அழகுகலை தொழில் முறைகளுக்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட உயர் வரி விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது சரியான நடவடிக்கையாக இருக்கும் என வர்த்தமானிக்கு அனுமதி வழங்கிய குழு தெரிவித்துள்ளது.


இல்லையெனில் கறுப்புச் சந்தை வியாபாரத்தை தடுக்க முடியாது என குழுவில் விவாதிக்கப்பட்டது.

மேலும், வர்த்தமானி எண் 2308/51இல் வெளியிடப்பட்ட அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகளுக்குக் குழு ஒப்புதல் அளித்தது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள பொருட்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி இலக்கம் 2307/12 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் அரசாங்க நிதிக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.விளையாட்டுப் பொருட்கள், புகையிரத உதிரி பாகங்கள், அழகுகலை தொழில் துறையில் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.சுற்றுலா மற்றும் அழகுகலை தொழில் முறைகளுக்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட உயர் வரி விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது சரியான நடவடிக்கையாக இருக்கும் என வர்த்தமானிக்கு அனுமதி வழங்கிய குழு தெரிவித்துள்ளது.இல்லையெனில் கறுப்புச் சந்தை வியாபாரத்தை தடுக்க முடியாது என குழுவில் விவாதிக்கப்பட்டது.மேலும், வர்த்தமானி எண் 2308/51இல் வெளியிடப்பட்ட அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகளுக்குக் குழு ஒப்புதல் அளித்தது.

Advertisement

Advertisement

Advertisement