• May 20 2024

விஜய்யின் இளமைக்கு காரணம் இந்த புட் டயட் தானா..? உண்மையை உளறிய நடிகர் ஷாம்

keerthana / Jan 14th 2023, 8:29 am
image

Advertisement

 விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிய திரைப்படம் தான் வாரிசு.இப்படம் வெளியாகி வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.இப்படத்தினை இயக்குநர் வம்சி இயக்கியிருந்ததோடு போனிகபூர் தயாரித்திருந்தார்.

விஜய் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்தவகையில் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு என பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.


குறிப்பாக படத்தில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் அவருடன் இணைந்து பயணித்துள்ள நடிகர் ஷாமின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் அண்மையில் ஓர் பேட்டியில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது

“20 வருடங்களுக்கு முன்பு குஷி என்கிற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளேன். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர் என்று கூட சொல்லலாம்.


இந்த படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பில் உடன் நடிக்கும் எந்த நடிகர்களையும் ஈகோ இல்லாமல் பார்த்துக்கொண்டார். எந்த ஒருவரை பற்றியும் தவறாக ஒரு வார்த்தை பேச மாட்டார். படப்பிடிப்பின்போது அவர் போன் பயன்படுத்தவே மாட்டார். அப்படியே யாரிடமாவது பேசவேண்டும் என்றாலும் உணவு இடைவேளையில் மட்டுமே பேசுவார்.. அதை பார்த்துவிட்டு நானும் படப்பிடிப்பு சமயங்களில் எனது போனை தூக்கி போட்டுவிட்டேன்.

விஜய் சாரிடம் பேசும்போது, எப்படி அண்ணா நாளுக்கு நாள் இளமை ஆகிக்கொண்டே போகிறீர்கள், இதற்காக என்ன உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள் என கேட்டால், தினசரி பூரி, பொங்கல் தான் சாப்பிடுகிறேன், எப்பவாவது உடற்பயிற்சி செய்கிறேன் என சொல்லி ஷாக் கொடுத்தார் என கூறியுள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களை எல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு அயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சரியப்படுத்தினார். அப்போது தன் வீட்டில் உள்ள பணியாளர்களை எல்லாம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார் என்றும் கூறியுள்ளார்.

விஜய்யின் இளமைக்கு காரணம் இந்த புட் டயட் தானா. உண்மையை உளறிய நடிகர் ஷாம்  விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிய திரைப்படம் தான் வாரிசு.இப்படம் வெளியாகி வசூலிலும் அள்ளிக்குவித்து வருகின்றது.இப்படத்தினை இயக்குநர் வம்சி இயக்கியிருந்ததோடு போனிகபூர் தயாரித்திருந்தார்.விஜய் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்தவகையில் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு என பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.குறிப்பாக படத்தில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் அவருடன் இணைந்து பயணித்துள்ள நடிகர் ஷாமின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் அண்மையில் ஓர் பேட்டியில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது“20 வருடங்களுக்கு முன்பு குஷி என்கிற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளேன். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர் என்று கூட சொல்லலாம்.இந்த படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பில் உடன் நடிக்கும் எந்த நடிகர்களையும் ஈகோ இல்லாமல் பார்த்துக்கொண்டார். எந்த ஒருவரை பற்றியும் தவறாக ஒரு வார்த்தை பேச மாட்டார். படப்பிடிப்பின்போது அவர் போன் பயன்படுத்தவே மாட்டார். அப்படியே யாரிடமாவது பேசவேண்டும் என்றாலும் உணவு இடைவேளையில் மட்டுமே பேசுவார். அதை பார்த்துவிட்டு நானும் படப்பிடிப்பு சமயங்களில் எனது போனை தூக்கி போட்டுவிட்டேன்.விஜய் சாரிடம் பேசும்போது, எப்படி அண்ணா நாளுக்கு நாள் இளமை ஆகிக்கொண்டே போகிறீர்கள், இதற்காக என்ன உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள் என கேட்டால், தினசரி பூரி, பொங்கல் தான் சாப்பிடுகிறேன், எப்பவாவது உடற்பயிற்சி செய்கிறேன் என சொல்லி ஷாக் கொடுத்தார் என கூறியுள்ளார்.படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களை எல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு அயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சரியப்படுத்தினார். அப்போது தன் வீட்டில் உள்ள பணியாளர்களை எல்லாம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement