அடுத்த வருடம் மாதம் பெப்ரவரி 19ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது பெரும்பாலான பாடசாலைகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
முகத்துவாரம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் இடம்பெற்ற மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலைகளில் உள்ள 7,47,093 மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்கான வவுச்சர்கள் வழங்குவதற்கு இரண்டாயிரத்து இருநூறு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. samugammedia அடுத்த வருடம் மாதம் பெப்ரவரி 19ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது பெரும்பாலான பாடசாலைகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் என்பன வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். முகத்துவாரம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் இடம்பெற்ற மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலைகளில் உள்ள 7,47,093 மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்கான வவுச்சர்கள் வழங்குவதற்கு இரண்டாயிரத்து இருநூறு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.மேலும், எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.