• Nov 26 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு...!

Sharmi / Jul 15th 2024, 8:37 am
image

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்.எம்.ஆர்.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை அறிவிக்க எதிர்வரும் 17ஆம் திகதி அரசியலமைப்பின் பிரகாரம்  தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இம்மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் திகதியை அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு போதிய அவகாசம் கிடைக்கும்.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தவுள்ளதுடன், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 17 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்.எம்.ஆர்.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை அறிவிக்க எதிர்வரும் 17ஆம் திகதி அரசியலமைப்பின் பிரகாரம்  தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் திகதியை அறிவிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு போதிய அவகாசம் கிடைக்கும்.எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தவுள்ளதுடன், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 17 மில்லியன் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement