• Jan 04 2025

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Chithra / Dec 26th 2024, 11:18 am
image

 

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவு நீடிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை அமுல்படுத்தும் திகதி அவ்வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், கடமைத் தேவைகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு  நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவு நீடிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.2025 ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை அமுல்படுத்தும் திகதி அவ்வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.எவ்வாறெனினும், கடமைத் தேவைகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement