• Dec 27 2024

சுனாமி அனர்த்த 20 ஆவது வருட பூர்த்தி : கிண்ணியாவில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிப்பு

Tharmini / Dec 26th 2024, 11:21 am
image

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு, இன்று (26) கிண்ணியாவில் பல இடங்களில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச செய செயலகம் ஆகியனவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட, சுனாமி நினைவு தின பிரதான வைபவம் கிண்ணியா கடற்கரை பூங்காவில் இடம் பெற்றது. 

கிண்ணியா பிரதேச செயலாளர், எம். எச். எம் கனி தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்வில், சுனாமி அனர்த்தத்தினால், உயிரிழந்தவர்களுக்கு காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌன செலுத்தப்பட்டது.

மேலும், கிண்ணியா பிரதேசத்தில் உயிரிழந்த 386 பேரின் ஈடேற்றத்துக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

இதனை கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையின் பிரதித் தலைவர் மெளலவி ஏ.ஜே.எம். ரியாஸ், ஆலங்கேணி மாரியம்மன் ஆலய பிரதம குரு தினேஷ்ராஜ் ஷர்மா ஆகியோர் இந்த பிரார்த்தனையை நடாத்தி வைத்தனர். 

இந்த நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஸ்வி, கிண்ணியா மஜ்லிஸ் சூரா சபை தலைவர் ஏ. ஆர். எம். பரீட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







சுனாமி அனர்த்த 20 ஆவது வருட பூர்த்தி : கிண்ணியாவில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிப்பு சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு, இன்று (26) கிண்ணியாவில் பல இடங்களில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச செய செயலகம் ஆகியனவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட, சுனாமி நினைவு தின பிரதான வைபவம் கிண்ணியா கடற்கரை பூங்காவில் இடம் பெற்றது. கிண்ணியா பிரதேச செயலாளர், எம். எச். எம் கனி தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்வில், சுனாமி அனர்த்தத்தினால், உயிரிழந்தவர்களுக்கு காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌன செலுத்தப்பட்டது.மேலும், கிண்ணியா பிரதேசத்தில் உயிரிழந்த 386 பேரின் ஈடேற்றத்துக்காக சர்வமத பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.இதனை கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையின் பிரதித் தலைவர் மெளலவி ஏ.ஜே.எம். ரியாஸ், ஆலங்கேணி மாரியம்மன் ஆலய பிரதம குரு தினேஷ்ராஜ் ஷர்மா ஆகியோர் இந்த பிரார்த்தனையை நடாத்தி வைத்தனர். இந்த நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஸ்வி, கிண்ணியா மஜ்லிஸ் சூரா சபை தலைவர் ஏ. ஆர். எம். பரீட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement