• Jan 19 2025

தென்கொரியவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

Chithra / Jan 8th 2025, 8:33 am
image

  

குறிப்பிட்ட வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களின் தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலுக்காக செல்பவர்களின் செயற்பாடுகளின் காரணமாக இந்நாட்டிற்கு கிடைக்கும் வேலை ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும் என்பதால், நிர்ணயிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்தால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நேற்று தென்கொரியாவில் வேலைக்காகச் செல்லும் 96 இலங்கையர்களுக்கான விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வில் பணியகத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் ஏறக்குறைய 8,000 இலங்கையர்களுக்கு தென் கொரிய தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தென்கொரியாவிற்கு தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ளும் 16 நாடுகளில் இலங்கையில் இருந்து உயர் திறன் கொண்ட தரமான தொழிலாளர்களை அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தென்கொரியவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்   குறிப்பிட்ட வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களின் தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.தொழிலுக்காக செல்பவர்களின் செயற்பாடுகளின் காரணமாக இந்நாட்டிற்கு கிடைக்கும் வேலை ஒதுக்கீடு தீர்மானிக்கப்படும் என்பதால், நிர்ணயிக்கப்பட்ட விசா காலம் முடிவடைந்தால், சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.நேற்று தென்கொரியாவில் வேலைக்காகச் செல்லும் 96 இலங்கையர்களுக்கான விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வில் பணியகத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.2025ஆம் ஆண்டில் ஏறக்குறைய 8,000 இலங்கையர்களுக்கு தென் கொரிய தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.தென்கொரியாவிற்கு தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ளும் 16 நாடுகளில் இலங்கையில் இருந்து உயர் திறன் கொண்ட தரமான தொழிலாளர்களை அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement