• Dec 25 2024

கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு!

Chithra / Dec 25th 2024, 11:37 am
image


ஹங்குராங்கெத்த கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மிக விரைவில்   காணிகளை பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

அண்மையில் கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக அவரின் பணிப்புரையின் பேரில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் கபரகல தோட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய பாதிப்புகள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்ததுடன் உடனடியாக சுமார் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களை பெற்றுக் கொடுத்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான காணிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.

தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் என இந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டதோடு, அதனை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் மிக விரைவில் அவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக தோட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இராதாகிருஷ்ணன் எம்.பி விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையின் மூலம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அண்மையில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காணிகளை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கும் காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையிலேயே, குறித்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டு மிக விரைவில் அவர்களுக்கான காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் நல்லாட்சி காலத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டதை போல புதிய அரசாங்கமும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனவும், இந்த நடவடிக்கையை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு ஹங்குராங்கெத்த கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மிக விரைவில்   காணிகளை பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  அண்மையில் கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இது தொடர்பாக அவரின் பணிப்புரையின் பேரில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் கபரகல தோட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய பாதிப்புகள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்ததுடன் உடனடியாக சுமார் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களை பெற்றுக் கொடுத்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான காணிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் என இந்த பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டதோடு, அதனை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் மிக விரைவில் அவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக தோட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இராதாகிருஷ்ணன் எம்.பி விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையின் மூலம் மேலும் தெரிவித்துள்ளதாவது,அண்மையில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காணிகளை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கும் காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதனடிப்படையிலேயே, குறித்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டு மிக விரைவில் அவர்களுக்கான காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அரசாங்கம் நல்லாட்சி காலத்தில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டதை போல புதிய அரசாங்கமும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனவும், இந்த நடவடிக்கையை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement