கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று(08) வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
கடந்த கால கூட்ட அறிக்கை, நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன் போது, கிளிநொச்சி மாவட்ட விவசாய பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயம் காப்புறுதி, மாகாண விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், விதை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பில் திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டன.
இதனைவிட, கிளிநொச்சி மாவட்டதில் நெற்செய்கையில் கபில தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பப்ட நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விளக்கமளித்திருந்தனர்.
குறித்த கபில தத்திகளின் பரவலுக்கு காலநிலை, தன்னிச்சையான கிருமி நாசினி கையாளுகை, கலாவதி திகதி முடிவடைந்த கிருமி நாசினிகளை பயன்படுத்தியமை, வயலில் நீர் உள்ளபோது கிருமி நாசினி தெளித்தமை, வெவ்வேறான காலகட்டங்களில் பயிர்ச் செய்கை முதலானவை சுட்டிக்காட்டப்பட்டன.
குறித்த நடவடிக்கைகள் தொடர்பான விவசாயிகளுக்கு ஒலி பெருக்கி ஊடாக பொது அறிவிப்பொன்றை இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், நீர்ப்பாசண பொறியியலாளர் பிரிவுகளின் பொறியியலாளர்கள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், பொலிஸ் பிரிவினர், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய கூட்டம்.samugammedia கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று(08) வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.கடந்த கால கூட்ட அறிக்கை, நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.இதன் போது, கிளிநொச்சி மாவட்ட விவசாய பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயம் காப்புறுதி, மாகாண விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், விதை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பில் திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டன.இதனைவிட, கிளிநொச்சி மாவட்டதில் நெற்செய்கையில் கபில தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பப்ட நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விளக்கமளித்திருந்தனர்.குறித்த கபில தத்திகளின் பரவலுக்கு காலநிலை, தன்னிச்சையான கிருமி நாசினி கையாளுகை, கலாவதி திகதி முடிவடைந்த கிருமி நாசினிகளை பயன்படுத்தியமை, வயலில் நீர் உள்ளபோது கிருமி நாசினி தெளித்தமை, வெவ்வேறான காலகட்டங்களில் பயிர்ச் செய்கை முதலானவை சுட்டிக்காட்டப்பட்டன.குறித்த நடவடிக்கைகள் தொடர்பான விவசாயிகளுக்கு ஒலி பெருக்கி ஊடாக பொது அறிவிப்பொன்றை இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், நீர்ப்பாசண பொறியியலாளர் பிரிவுகளின் பொறியியலாளர்கள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், பொலிஸ் பிரிவினர், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.