• Sep 29 2024

நாட்டில் வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Tax
Chithra / Sep 28th 2024, 8:01 am
image

Advertisement

 

இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், 2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் மற்றும் தவறுகையில் உள்ள வரியைச் செலுத்தி முடித்தல் தொடர்பில் விளக்கமளித்துள்ளது.

அதன்படி வருமான வரியைச் செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும், அந்த மதிப்பீட்டாண்டுக்குரிய அனைத்து வரிமான வரியினையும் செப்டம்பர் 30, 2024 அன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்தி முடித்தல் வேண்டும். 

அவ்வாறு செய்யாவிடின், வருமான வரி செலுத்தாத்தற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படாது அல்லது குறைக்கப்படாது.

மேலும், அக்டோபர் 30, 2024 அன்று அல்லது அதற்கு முன் நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் செலுத்தி முடிக்க வேண்டும்.

அந்த திகதிக்குப் பிறகு செலுத்த தவறுகையில் உள்நாட்டு இறைவரி  சட்ட நியதிகளுக்கு அமைவாக உள்ள சட்ட நடவடிக்கைகள் உள்ளடங்களாக கடுமையான சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


நாட்டில் வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு  இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.அந்த அறிக்கையில், 2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் மற்றும் தவறுகையில் உள்ள வரியைச் செலுத்தி முடித்தல் தொடர்பில் விளக்கமளித்துள்ளது.அதன்படி வருமான வரியைச் செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும், அந்த மதிப்பீட்டாண்டுக்குரிய அனைத்து வரிமான வரியினையும் செப்டம்பர் 30, 2024 அன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்தி முடித்தல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடின், வருமான வரி செலுத்தாத்தற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படாது அல்லது குறைக்கப்படாது.மேலும், அக்டோபர் 30, 2024 அன்று அல்லது அதற்கு முன் நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் செலுத்தி முடிக்க வேண்டும்.அந்த திகதிக்குப் பிறகு செலுத்த தவறுகையில் உள்நாட்டு இறைவரி  சட்ட நியதிகளுக்கு அமைவாக உள்ள சட்ட நடவடிக்கைகள் உள்ளடங்களாக கடுமையான சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement