• Jan 10 2025

நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்ட முக்கிய அறிக்கை

Chithra / Jan 10th 2025, 11:59 am
image

 

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது அறிக்கையை நிதி அமைச்சிடம் கையளித்துள்ளது. 

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தலுக்காக 2023 ஆம் ஆண்டு இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. 

இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 அடிப்படை உரிமைகளை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிட்டிருந்தது. 

இதன்பின்னர், சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கருத்து கோருவதற்காக குழு நியமிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச சார்பற்ற அமைப்பு தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமான சஞ்ஜீவ விமல குணரத்ன உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழு இதற்காக நியமிக்கப்பட்டது. 

அந்த குழுவின் அறிக்கையே தற்போது நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்ட முக்கிய அறிக்கை  நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது அறிக்கையை நிதி அமைச்சிடம் கையளித்துள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தலுக்காக 2023 ஆம் ஆண்டு இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 அடிப்படை உரிமைகளை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிட்டிருந்தது. இதன்பின்னர், சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கருத்து கோருவதற்காக குழு நியமிக்கப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.அரச சார்பற்ற அமைப்பு தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமான சஞ்ஜீவ விமல குணரத்ன உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழு இதற்காக நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையே தற்போது நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement