• Nov 14 2024

பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - இம்ரான் எம்.பி தெரிவிப்பு!

Tamil nila / Nov 10th 2024, 8:32 am
image

தற்போது பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.எமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான சதி இடம் பெற்று வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினறும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இம்ரான் மகரூப் கலந்து கொண்ட மூதூர் பிரதேச பெண்கள் மாநாடு மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்றது. 

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் இம்ரான் மகரூப் உரையாற்றுகையில்

தற்போது பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.எமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான சதி இடம் பெற்று வருகிறது.

சஜித் பிரேமதாச எந்தெந்த இடங்களில் அதிகமான வாக்குகளை பெற்றாரோ அந்தந்த இடங்களில் அதிகமான வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.வாக்குகளை பிரிப்பதற்காகவும் எமது சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காகவும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இன்று நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மாயை காட்டப்படுகிறது.69 லட்சம் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தோம் என்பதை தெரியும்.அதேபோன்றுதான் இன்று வித்தியாசமான ஊழலற்ற ஆட்சி என்று ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சரியான மாற்றமா என்பதை சிந்திக்க வேண்டும்.

இன்று மக்களின் வாக்குகளை பெறுவதற்காக காசுகள் பொதிகள் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.இவர்களா எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவமாக வரப்போகிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.வாய் பேச்சில் மாத்திரமே ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள் அவர்களுடைய செயற்பாட்டில் எதுவும் இல்லை.இந்த நிலைப்பாடு நியாயமான ஆட்சியைக் கொண்டு வருமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.


பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - இம்ரான் எம்.பி தெரிவிப்பு தற்போது பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.எமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான சதி இடம் பெற்று வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினறும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இம்ரான் மகரூப் கலந்து கொண்ட மூதூர் பிரதேச பெண்கள் மாநாடு மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் இம்ரான் மகரூப் உரையாற்றுகையில்தற்போது பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.எமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான சதி இடம் பெற்று வருகிறது.சஜித் பிரேமதாச எந்தெந்த இடங்களில் அதிகமான வாக்குகளை பெற்றாரோ அந்தந்த இடங்களில் அதிகமான வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.வாக்குகளை பிரிப்பதற்காகவும் எமது சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காகவும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.இன்று நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மாயை காட்டப்படுகிறது.69 லட்சம் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தோம் என்பதை தெரியும்.அதேபோன்றுதான் இன்று வித்தியாசமான ஊழலற்ற ஆட்சி என்று ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சரியான மாற்றமா என்பதை சிந்திக்க வேண்டும்.இன்று மக்களின் வாக்குகளை பெறுவதற்காக காசுகள் பொதிகள் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.இவர்களா எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவமாக வரப்போகிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.வாய் பேச்சில் மாத்திரமே ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள் அவர்களுடைய செயற்பாட்டில் எதுவும் இல்லை.இந்த நிலைப்பாடு நியாயமான ஆட்சியைக் கொண்டு வருமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement