துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில்
நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
இஸ்தான்புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் மாகாணங்களிலும்
நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இதனால், சிந்திர்கியில் பல கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய பிற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
கடந்த ஒகஸ்டிலும் சிந்திர்கியில் கடுமையான நிலநடுக்கம் தாக்கியது.
இதில் ஒருவர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, பாலிகெசிரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சிறிய அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாலிகெசிர் மாகாணத்தில், இரவு நடந்த பேரனர்த்தம், அலறிய மக்கள். துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில்நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இஸ்தான்புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.இதனால், சிந்திர்கியில் பல கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய பிற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. கடந்த ஒகஸ்டிலும் சிந்திர்கியில் கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதனை தொடர்ந்து, பாலிகெசிரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சிறிய அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.