கடந்த இரண்டு நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் உந்துருளிகள் உட்பட 100 ற்கும் மேற்பட்ட வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பண்டாரகம, கிதேல்பிடிய பகுதியில் அதிக திறன் கொண்ட 4 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 21 முதல் 23 வயதுக்குட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அத்துருகிரிய மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளின் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் 100ற்கும் மேற்பட்ட வாகனங்களை கைப்பற்றிய பொலிஸார் கடந்த இரண்டு நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் உந்துருளிகள் உட்பட 100 ற்கும் மேற்பட்ட வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பண்டாரகம, கிதேல்பிடிய பகுதியில் அதிக திறன் கொண்ட 4 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 21 முதல் 23 வயதுக்குட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். மேலும் அத்துருகிரிய மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளின் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.