திருகோணமலை மாவட்ட முதியோர்களுக்கு, முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் கீழ், ரூபா 1 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான காதுகேள் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இதற்கான நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த கெட்டி ஆராய்ச்சி தலைமையில் புதன்கிழமை (25) நடைபெற்றது.
குச்சவெளி மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள, தேவையான முதியோர்களுக்கு இந்த கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலதிக அரசாங்க அதிபர், S. சுதாகரன், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் A.L.M இர்பான் மற்றும் யாழ். போதனா வைத்திசாலையின் ஒலியியல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
திருகோணமலையில் முதியோர்களுக்கு : காதுகேள் கருவிகள் வழங்கல் திருகோணமலை மாவட்ட முதியோர்களுக்கு, முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் கீழ், ரூபா 1 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான காதுகேள் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இதற்கான நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த கெட்டி ஆராய்ச்சி தலைமையில் புதன்கிழமை (25) நடைபெற்றது.குச்சவெளி மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள, தேவையான முதியோர்களுக்கு இந்த கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.மேலதிக அரசாங்க அதிபர், S. சுதாகரன், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் A.L.M இர்பான் மற்றும் யாழ். போதனா வைத்திசாலையின் ஒலியியல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.