• Sep 30 2024

கோலாகலமாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலா சாலையின் நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா

Chithra / Aug 10th 2023, 4:28 pm
image

Advertisement

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால நிகழ்வின் முக்கிய அங்கமாக, நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா 09.08.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம் பெற்றது. 

நிகழ்வில் இசுருபாய கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் டாக்டர் புண்ணியதாஸவும், சிறப்பு விருந்தினராக ஆசிரியர் கல்வி பணிப்பாளர் ஸ்ரீமா தசநாயக்காவும் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தமும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வட மாகாண கல்வி பணிப்பாளர்  தி.ஜோன் குயின்ரஸ்,  கலாசாலையின் முன்னாள் அதிபர்களான வே.கா கணபதிப்பிள்ளை,  வீ.கருணைலிங்கம் மற்றும் வடமகாணத்தில் உள்ள அனைத்து ஆசிரிய மத்திய நிலையங்களின் முகாமையாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முதுமாணிக் கற்கை நெறி உள்ளக பயிற்சியினை மேற்கொள்ளும் அலுவலர்களும் இதில் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்வாக கலாசாலையில் அமைந்துள்ள யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டினை தொடர்ந்து விருந்தினர்கள் பண்பாட்டு ஆற்றுகைகளுடன் ஊர்வலமாக

அழைத்து வரப்பட்டனர். அதில் குதிரை ஆட்டம் காவடி ஆட்டம் ஒயிலாட்டம் போன்றவை ஆசிரிய மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன.

பிரதம ஆணையாளர் நினைவுக் கல்லினை திரை நீக்கம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ரதி லட்சுமி மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி நடைபெற்றன.

திருக்குறள் வழிபாட்டினை  தொடர்ந்து வரவேற்புரையினை பிரதி அதிபர் திரு  க.செந்தில்குமரன், தலைமை உரையினை அதிபர் ச.லலீசன் ஆற்றினர். தொடர்ந்து அதிதிகள்பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

நூற்றாண்டு தொடர்பாக கலாசாலையில் ஆசிரிய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலாசாலை தொடர்பான மற்றும் ஆசிரியர் கல்வி தொடர்பான பொது அறிவுப் போட்டியில் முதல் 20 இடங்களையும் பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வுகளை  தர்மினி ரஜீவன் தொகுத்து வழங்கினார். நினைவிடத்திற்கான அனுசரணையை நவமங்கை நிவாச நிறுவுநரும் முன்னாள் ஆசிரிய கல்வி பணிப்பாளருமாகிய சுவர்ணா நவரட்ணம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கலை நிகழ்வுகளாக இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் வழிபாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து சிங்கள இஸ்லாமிய தமிழ் பண்பாடுகளை வெளிப்படுத்தும் பல்கலாசார நடன நிகழ்வும் இடம்பெற்றது. கலாசாலையில் நாடு முழுவதும் இருந்தான ஆசியர்கள் பயிற்சி பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோலாகலமாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலா சாலையின் நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால நிகழ்வின் முக்கிய அங்கமாக, நூற்றாண்டு நினைவிடத் திறப்பு விழா 09.08.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் இசுருபாய கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வின் பிரதம விருந்தினராக ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் டாக்டர் புண்ணியதாஸவும், சிறப்பு விருந்தினராக ஆசிரியர் கல்வி பணிப்பாளர் ஸ்ரீமா தசநாயக்காவும் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தமும் கலந்து கொண்டனர்.நிகழ்வில் வட மாகாண கல்வி பணிப்பாளர்  தி.ஜோன் குயின்ரஸ்,  கலாசாலையின் முன்னாள் அதிபர்களான வே.கா கணபதிப்பிள்ளை,  வீ.கருணைலிங்கம் மற்றும் வடமகாணத்தில் உள்ள அனைத்து ஆசிரிய மத்திய நிலையங்களின் முகாமையாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக முதுமாணிக் கற்கை நெறி உள்ளக பயிற்சியினை மேற்கொள்ளும் அலுவலர்களும் இதில் கலந்து கொண்டனர்.முதல் நிகழ்வாக கலாசாலையில் அமைந்துள்ள யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டினை தொடர்ந்து விருந்தினர்கள் பண்பாட்டு ஆற்றுகைகளுடன் ஊர்வலமாகஅழைத்து வரப்பட்டனர். அதில் குதிரை ஆட்டம் காவடி ஆட்டம் ஒயிலாட்டம் போன்றவை ஆசிரிய மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன.பிரதம ஆணையாளர் நினைவுக் கல்லினை திரை நீக்கம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ரதி லட்சுமி மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி நடைபெற்றன.திருக்குறள் வழிபாட்டினை  தொடர்ந்து வரவேற்புரையினை பிரதி அதிபர் திரு  க.செந்தில்குமரன், தலைமை உரையினை அதிபர் ச.லலீசன் ஆற்றினர். தொடர்ந்து அதிதிகள்பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.நூற்றாண்டு தொடர்பாக கலாசாலையில் ஆசிரிய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலாசாலை தொடர்பான மற்றும் ஆசிரியர் கல்வி தொடர்பான பொது அறிவுப் போட்டியில் முதல் 20 இடங்களையும் பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.நிகழ்வுகளை  தர்மினி ரஜீவன் தொகுத்து வழங்கினார். நினைவிடத்திற்கான அனுசரணையை நவமங்கை நிவாச நிறுவுநரும் முன்னாள் ஆசிரிய கல்வி பணிப்பாளருமாகிய சுவர்ணா நவரட்ணம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கலை நிகழ்வுகளாக இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களின் வழிபாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து சிங்கள இஸ்லாமிய தமிழ் பண்பாடுகளை வெளிப்படுத்தும் பல்கலாசார நடன நிகழ்வும் இடம்பெற்றது. கலாசாலையில் நாடு முழுவதும் இருந்தான ஆசியர்கள் பயிற்சி பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement